cricket: இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக பும்ராவை அறிவிக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வரும் நிலையில் தற்போது ஒரு சிக்கல் எழுந்துள்ளது.
இந்திய அணி தற்போது சமீபத்தில் ஆஸ்திரேலிய சுற்றுபயணத்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றது. ஆனால் 4 போட்டியில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு செல்லும் அதனால் வெளியேறியது.
இந்த தொடரில் இந்திய அணியில் சிற்பக விளையாடிய வீரர் என்றால் அது பும்ரா தான் அவர் தான் இந்தத் தொடரின் தொடர் நாயகன் விருதை பெற்றார். இந்த த்டோரில் அவர் கேப்டனாக இருந்த முதல் போட்டியில் மட்டும் இந்திய அணி வெற்றி பெற்றது. 9 இன்னிங்க்ஸில் பந்து வீசி 32 விகெட்டுகளை வீழ்த்தினார். ஆனாலும் இதில் உள்ள சிக்கல் அவருக்கு காயம் ஏற்படுவதுதான் கடைசி போட்டியில் அவருக்கு காயம் ஏற்பட்டு பந்து வீச முடியாமல் போனார்.
மேலும் அவர் கடைசி போட்டியில் கேப்டனாக இருந்தார் வெளியேறிய பின் விராட் கேப்டன்சி செய்தார். இந்நிலையில் அவர் தொடர்ச்சியான போட்டிகளில் விளையாடுவது அவருக்கு உடல் சோர்வை ஏற்படுத்தும் எனவே அவருக்கு தேவையான ஓய்வு தேவை அப்போதுதான் அவரால் ஒரு கேப்டனாக சோர்வு இல்லாமல் செயல் பட முடியும் என கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் ரசிகர்கள் கறுத்து தெரிவித்து வருகின்றனர்.