தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கேபிள் டிவி மற்றும் வாடிக்கையாளர்களின் கோரிக்கையாக இருந்த ஹெச்டி செட்டாப் பாக்ஸ் திட்டமானது விரைவில் பயனர்களை வந்தடையும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான பயனர்களை வந்தடையும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் பதிவு பெற்ற செட்டாப் பாக்ஸ் ஆப்பரேட்டர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-
ரூ.140 + GST என்ற குறைந்த கட்டணத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனமானது அனைத்து குடும்பங்களுக்கும் கேபிள் டிவி சேவைகளை வழங்கி வருகிறது. அதனை மேம்படுத்தும் விதமாக தற்பொழுது ஹெச்டி செட்டாப் பாக்ஸ்கள் விநியோகம் நடைபெற தொடங்கியுள்ளது.
கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக தமிழக அரசு 50 லட்சம் ரூபாய் மதிப்பில் வரையறை செய்து எச்டி செட்டாப் பாக்ஸ்களின் விநியோகத்தை துவங்கி இருப்பதாகவும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக இரண்டு லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் விநியோகம் செய்யப்பட இருப்பதாகவும், மேலும் தேவைப்படும் எனில் அதற்கான கையிருப்புகளும் உள்ளது என்று தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனை பெற விரும்பும் பயனர்கள் செட்டாப் பாக்ஸ் ஆப்பரேட்டர்களிடம் 500 ரூபாய் வைப்புத் தொகையாக கொடுத்து இதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அனைத்து ஆபரேட்டர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவிப்பு விடுத்துள்ளது.
குறிப்பு :-
உள்ளூர் பகுதிகளில் இருக்கக்கூடிய ஆபரேட்டர்கள் அல்லது விநியோகஸ்தர்கள் இந்த வாய்ப்பினை தவறவிடும் பொழுது இதற்காக புதிய உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நியமனம் செய்து அதன்மூலம் பொதுமக்களுக்கு hd செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டராக விரும்புவார்கள் www.tactv.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என்றும் இந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.