2019 ஆம் ஆண்டு டிசம்பர் 1 முதல் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்யக்கூடியவர்களுக்கு டோல்கேட்டுகளில் fastag உதவியுடன் தோள் கட்டணத்தை செலுத்த டிஜிட்டல் முறையானது உருவாக்கப்பட்டது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் இந்த fastag முறையானது தற்பொழுது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஃபாஸ்டேக் வசதியானது வாகனங்கள் டோல்கேட்டுகளில் நீண்ட நேரம் காத்திருப்பை குறைப்பதற்காகவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்டதாகும். இந்த முறையில் ஃபாஸ்டேக் அட்டைகளில் பணத்தினை நிரப்புவதன் மூலம் கார் கண்ணாடியில் ஒட்டப்பட்டு இருக்கும் RFID மூலமாக டோல்கேட்களில் சுங்கச்சாவடி கட்டணம் ஸ்கேன் செய்யப்பட்டு ரீசார்ஜ் செய்யப்பட்ட அட்டைகளில் இருந்து குறைக்கப்படும். இவ்வாறு செய்வதன் மூலம் டோல்கேட்டுகளில் அதிக அளவு நேரம் செலவிடாமல் நேரத்தை காத்தல் மற்றும் கூட்ட நெரிசலை தவிர்க்க இந்த ஃபாஸ்டேக் வசதி மிக முக்கியமானதாக கூறப்படுகிறது.
மேலும், ப்ரீபெய்ட் கணக்குகளின் மூலம் ஃபாஸ்டேக் பயன்படுத்துபவர்களுக்கு வழக்கமான டாப் அப் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் டாப் அப் செய்யவில்லை என்றால் சுங்கச்சாவடியில் பணப்பரிவர்தனையை மேற்கொள்ள வேண்டி இருக்கும். குறிப்பாக, வாடிக்கையாளர்கள் நேஷனல் எலக்ட்ரானிக் டோல் கலெக்ஷன் நெட்வொர்க்குடன் தொடர்புடைய வாடிக்கையாளர்கள் அவர்களுடைய வங்கி கணக்குகளில் இருந்து நேரடியாக இந்த Fastag வசதி இணை பெற்றுக் கொள்ள முடியும்.
மகாராஷ்டிரா அரசு தங்களுடைய சுங்கச்சாவடி உள்கட்ட அமைப்பை நவீனமாக்கும் முறையில், வாகன ஓட்டிகளுக்கு மிகவும் வசதியான மற்றும் பாதுகாப்பான அனுபவத்தை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிஜிட்டல் கட்டணங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான செயல்பாட்டை கட்டாயமாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த பாஸ்ட்டேக் வசதியானது மிகவும் நம்பகத் தன்மை மற்றும் பாதுகாப்பானதாக உணரப்படுவதால் பண பரிவர்த்தனைகளை நேரடியாக மேற்கொள்ளாமல் வாகன ஓட்டிகள் இந்த பாஸ்டாக்களை பயன்படுத்துவதன் மூலம் சுங்கச்சாவடிகளில் டிஜிட்டல் சேவைகள் மற்றும் உள்கட்ட அமைப்புகளில் மேம்பாடு அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.