பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே அவ்வப்போது மோதல்கள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது சமீப காலமாக அது பெரிய தாக்குதலாக மாறி வருகிறது. இந்நிலையில் இந்த தாக்குதலில் தாலிபான் களின் கைகளே ஓங்கி இருக்கும் நிலையில் உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வந்த நிலையில் தற்போது ஆப்கானிஸ்தான் எதிரி நாட்டுடன் கைகோர்த்துள்ளது.
இந்த தாக்குதலில் தொடக்கமானது பாகிஸ்தானில் டி டி பி தெஹ்ரிக் இ தலிபான் என்ற பாகிஸ்தான் தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டு அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்தனர். இவர்களின் நோக்கம் ஆப்கானிஸ்தானில் உள்ளது போல பாகிஸ்தானில் தாலிபான் களின் ஆட்சி கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் இந்த அமைப்பு உள்ள பக்திகா மாகாணத்தின் பர்மால் என்ற இடத்தில் வான்வழி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 47 அப்பாவி மக்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ஆப்கானிஸ்தான் தலிபான்கள் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலுக்கு பின் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் பாகிஸ்தான் எல்லையில் ஒரு பகுதியை தாக்கிய வீடியோவை வெளியிட்டனர். மேலும் அரசு நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் அறிவித்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் தஜிகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆப்கானிஸ்தானில் இருத்த ஆட்சியை அகற்றி தாலிபான் ஆட்சிக்கு வரும்போது வெளியேறிய அமைச்சர்கள் துணை முதல்வர் என அனைவரும் தஜிகிஸ்தானை சேர்ந்தவர்கள் அவர்கள் தாலிபான்களை முற்றிலும் எதிர்த்து என் ஆர் எப் என்ற அமைப்பும் செயல்பட்டு வருகிறது. இவர்களுடன் இணைந்தால் நாம் தப்பிக்கலாம் என்று தஜிகிஸ்தான் உடன் இணைந்துள்ளது பாகிஸ்தான்.