விவசாயிகளை அடையாளம் காண புதிய ஐடி கார்டு முறை!! வங்கியில் வரவு வைக்கப்படும் ரூ.6000!!

Photo of author

By Gayathri

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 3 தவணையாக ஆண்டுக்கு 6000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இனி இந்த தவணை முறை உதவித்தொகையை பெறுவதற்கு ஐடி கார்டு அவசியம் என கொண்டுவரும் நிலை உருவாக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பி எம் கிசான் திட்டமானது 2019 ஆம் ஆண்டு நிலம் வைத்திருக்கக்கூடிய அனைத்து விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அவர்களுடைய வங்கி கணக்குகளுக்கு நேரடியாக நிதி மாற்றப்படும் வகையில் டிபிடி முறையில் உருவாக்கப்பட்டது.

இதுவரை மத்திய அரசின் மூலம் சுமார் 9.25 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக அவர்களுடைய வங்கி கணக்குகளுக்கு ரூ.20,000 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டத்தில் உங்களுடைய பெயர் இருக்கிறதா ? இத்திட்டத்தின் மூலம் உங்களால் பயனடைய முடியுமா ? இத்திட்டத்தின் மூலம் உங்களது வங்கி கணக்குகளில் பணம் வரவு வைக்கப்படுகிறதா ? போன்ற தகவல்களை பெறுவதற்கான வழிமுறைகளை இங்கு காண்போம்.

முதலில் இந்த திட்டத்தில் நீங்கள் பயன்பெற வேண்டும் எனில் ஏற்கனவே இந்த திட்டத்தில் இணைந்திருத்தல் அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு விவசாயிகளிடம் அவர்களுக்கென தனி வங்கி கணக்குகளும் அந்த வங்கி கணக்குகள் முறையே கேஒய்சி உடன் இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் பயன்பெறுகிறீர்களா என்பதை சரி பார்க்க பின் உள்ளவற்றை தொடரவும் :-

✓ முதலில் அதிகாரப்பூர்வமான பி எம் கிசான் இணையதள பக்கத்தினை login செய்ய வேண்டும்.

✓ அதன் பின், அதில் உள்ள Beneficiary Status Page மூலமாக உள்நுழைய வேண்டும்.

✓ அவ்வாறு உள் நுழைந்த உடன் நீங்கள் ஏற்கனவே இந்த திட்டத்தில் பயன்பெற்று வருகிறீர்கள் என்றால் அங்கு கேட்கப்படும் உங்களுடைய ஆதார் எண் மற்றும் அக்கவுண்ட் எண் மூலம் உள்நுழைய வேண்டும்.

✓ அதன்பின், Get Data என்பதை தேர்வு செய்வதன் மூலம் இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் பயன்பெறுகிறீர்களா? இல்லையா என்பதை சரி பார்க்க முடியும்.

✓ அவ்வாறு நீங்கள் பயன் பெறுகிறீர்கள் என்றால் அதில் உங்களுடைய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.