தமிழகம் முழுவதும், இன்று முதல் தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் இலவச வேட்டி சேலை வழக்கப்படுகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பை சென்னையில் உள்ள சைதாப்பேட்டை, சின்னமலை ரேஷன் கடைகளில் தொடக்கிவைத்தார்.
தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக பொங்கள் பரிசுதொகுப்பை வழக்கிவந்து உள்ளார்கள் அதே போல் இந்த ஆண்டும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் மற்றும் ரொக்கப் பணமும் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த ஆண்டு பணம் இல்லை என்று தமிழக அரசு கூறி உள்ளது.
கடந்த ஆண்டு வரை பொங்கல் பரிசில் ரொக்க பணம் பெற்ற நிலையில், இந்த வருடம் ரொக்கப் பணம் இல்லை என்ற தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை சைதாப்பேட்டை 169-வது வார்டில் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்.
தமிழ்நாட்டில் உள்ள 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கையில் உள்ள தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களும் பொங்கல் பரிசுதொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு மொத்தம் ₹249.76 கோடி செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.