திபெத்தில் நடந்த இந்த நிலநடுக்கம் இந்தியாவின் டெல்லி, பிகார், அசாம் மற்றும் மேற்கு வாங்க வடமாநில பகுதிகளை தொடர்ந்து பல பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்தியாவில் மட்டும் இல்லை பூடான் நேபாளம் போன்ற நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.பல பகுதிகளில் சில பொருட்கள் அதிரும் அளவுக்கு உணரப்பட்டது. டெல்லி மற்றும் வட பகுதிகளில் கடுமையான அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் நேற்று முன் தினம் காலை 6 மணியளவில் மகிவும் சக்தி மிகுந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 10 கி மீ ஆழம் வரை நிலநடுக்க மையம் இருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் வீடுகள் என சரிந்து இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கம் 7.1 ரிக்டர் பதிவாகியுள்ளது. இதில் மொத்தம் பலியானவர்களின் எண்ணிக்கை 126 ஆக உள்ளது, மேலும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
திபெத்தில் நடந்த இந்த நிலநடுக்கம் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக கூறப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் மட்டும் நில அதிர்வானது 515 முறை குலுங்கி உள்ளது. அவற்றில் 95 சதவீதம் 3 ரிக்டர் அளவில் இருந்துள்ளது.இதனை தொடர்ந்து மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டும் என சீன அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார். உடனடி நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.