இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி நாடு திரும்பியுள்ளது. இந்நிலையில் இந்திய அணி இந்த தொடரை இழந்தது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றது. ஆனால் இந்த தொடரில் 4 போட்டிகளில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும் ஆனால் தோல்வி அடைந்து வெளியேறியது.
இந்திய அணி தோல்விக்கு முக்கிய காரணமாக ரோஹித் மற்றும் விராட் மீதான விமர்சனங்கள் கொட்டி குவித்தன. இதில் இருவரும் என் இன்னும் ஓய்வு பெறவில்லை என்று சரமாரியாக விமர்சனங்கள் எழுந்தது. விராட் கோலி அவுட் சைடு ஆப் பந்தை அடிக்க முயன்று தொடர்ந்து ஆட்டமிழந்து வந்தார். இதனை தொடர்ந்து ஓய்வு அறிவிக்க வேண்டும் என்ற குரல் இந்திய முழுவதும் எழுந்த வருகிறது.
இந்நிலையில் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார் அதில் அவர் கூறியதாவது, நான் எப்படி இருந்தேனோ அதே நிலையில் தான் அவரும் இருக்கிறார் எனவே அவர் ரன் குவிக்க வேண்டும் என்று விளையாடாமல் விக்கெட் விடாமல் விளையாட வேண்டும் பிறகு ரன் குவிக்க முடியும். சொல்வது வேடிக்கையாக தெரியலாம் ஆனால் அதுதான் உண்மை என்று கூறியுள்ளார்.சிறிது காலம் ஓய்வு எடுத்துக் கொண்டு பிறகு அணியில் சிறப்பாக விளையாடலாம் என்று கூறியுள்ளார்.