சளி இருமலை குறைக்கும் வெற்றிலை!! இந்த மாதிரி ஒருமுறை செய்யுங்கள்.. உடனடி பலன் கிடைக்கும்!!

Photo of author

By Divya

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி,இருமல் தொந்தரவை சந்தித்து வருகின்றனர்.பனி காலத்தில் இந்த சளி தொந்தரவு படாத பாடு படுத்துவதாக அனைவரும் புலம்பி வருகின்றனர்.சளியை தொடர்ந்து இருமல் பாதிப்பு ஏற்படுகிறது.

சாதாரண இருமல் நாளடைவில் வறட்டு இருமலாக மாறி தொண்டைப் புண்,தொண்டை கரகரப்பு போன்ற பாதிப்புகளை உண்டாக்கிவிடும்.இந்த சளி,இருமல் பாதிப்பில் இருந்து மீள வெற்றிலையை கொண்டு அற்புதமான வீட்டு வைத்தியம் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.பருவகால நோய்கள் அனைத்தையும் வெற்றிலை வைத்து குணப்படுத்திக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

1)வெற்றிலை – இரண்டு
2)சீரகம் – கால் தேக்கரண்டி
3)மிளகு – கால் தேக்கரண்டி
4)பூண்டு பற்கள் – நான்கு
5)வர மிளகாய் – இரண்டு
6)எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
7)கடுகு – கால் தேக்கரண்டி
8)உப்பு – தேவையான அளவு
9)தேங்காய் துருவல் – மூன்று தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:

**முதலில் அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடுபடுத்துங்கள்.அடுத்து கால் தேக்கரண்டி கடுகு சேர்த்து பொரியவிடுங்கள்.பிறகு கால் தேக்கரண்டி சீரகம் மற்றும் கால் தேக்கரண்டி மிளகு சேர்த்துக் கொள்ளுங்கள்.

**பின்னர் நான்கு பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு அதில் போட்டு வதக்க வேண்டும்.பிறகு இரண்டு வர மிளகாய் சேர்த்துக் கொண்டு வதக்குங்கள்.

**பிறகு இரண்டு வெற்றிலையை கிள்ளி போட்டு வதக்குங்கள்.வெற்றிலை கலவை நன்கு வதங்கி வந்ததும் தேங்காய் துருவலை கொட்டி வதக்க வேண்டும்.பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்க வேண்டும்.

**இந்த வெற்றிலை கலவையை நன்கு ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு ஒரு சுத்து விட்டுக் கொள்ளுங்கள்.பிறகு அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து சாப்பிடுங்கள்.இந்த வெற்றிலை பேஸ்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சளி,இருமல் பாதிப்பு குணமாகும்.

**வெற்றிலையை வைத்து கசாயம் செய்து பருகி வந்தாலும் சளி,இருமல் பாதிப்பு குணமாகும்.