நம் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஆடாதோடை வியக்கத்தக்க மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.ஆடாதோடை இலையின் சாறு சளி,இருமல் போன்ற பாதிப்புகளை குணப்படுத்துகிறது.
ஆடாதோடை இலையை அரைத்து பருகி வந்தால் நுரையீரல் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.நுரையீரலில் தேங்கி இருக்கும் அழுக்கு மற்றும் தொற்றுக் கிருமிகள் அடித்துக் கொண்டு வெளியேற வாரம் இருமுறை ஆடாதோடை இலை சாறு பருகி வரலாம்.
தேவையான பொருட்கள்:-
1)ஆடாதோடை இலை – நான்கு
2)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
ஸ்டெப் 01:
முதலில் நான்கு ஆடாதோடை இலையை தண்ணீர் கொண்டு நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 02:
இந்த ஆடாதோடை இலையை உரல் அல்லது மிக்சர் ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 03:
பிறகு இந்த ஆடாதோடை இலையின் சாறை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 04:
பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ளுங்கள்.
ஸ்டெப் 05:
பிறகு அரைத்த ஆடாதோடை இலை சாறை அதில் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.பிறகு ஒரு தேக்கரண்டி அளவு தூயத் தேன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து பருகி வந்தால் நுரையீரலில் தேங்கியுள்ள சளி,அழுக்கு மற்றும் தொற்றுக் கிருமிகள் அனைத்தும் நீங்கி நுரையீரலின் ஆரோக்கியம் பலப்படும்.
தேவையான பொருட்கள்:-
1)ஆடாதோடை இலை – இரண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
ஸ்டெப் 01:
முதலில் ஆடாதோடை இலையை தண்ணீரில் போட்டு நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள்.பிறகு இதை ஆவியில் வேகவைத்து கசக்கி சாறு பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள்.
ஸ்டெப் 02:
பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு இந்த நீரில் ஆடாதோடை இலை சாறை ஊற்றி நன்கு கலக்கி பருகி வந்தால் நுரையீரலில் தேங்கி இருக்கும் அழுக்கு,கழிவுகள் அனைத்தும் நீங்கிவிடும்.
அதேபோல் ஆடாதோடை இலையை அரைத்து தேன் சேர்த்து குழைத்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் ஆரோக்கியம் பலப்படும்.