நிம்மதியாக உறங்கி பல நாட்கள் ஆகிவிட்டதா? இந்த ஒரு ட்ரிங்க் குடிங்க.. இன்னைக்கு நைட் பீஸ்புல்லா தூங்குவீங்க!!

Photo of author

By Divya

இன்று பலருக்கு இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கம் கிடைப்பதில்லை.மன அழுத்தம்,வேலைப்பளு,மோசமான உணவுப்பழக்கம்,உடல் நலக் கோளாறு போன்ற காரணங்களால் இரவில் நிம்மதியான தூக்கம் தடைபடுகிறது.எனவே இரவு நேரத்தில் நன்றாக உறங்க இந்த ஒரு பானத்தை செய்து பருகுங்கள்.

தேவையான பொருட்கள்:

**பசும் பால் – ஒரு கிளாஸ்
**தேன் – ஒரு ஸ்பூன்
**சுக்கு – ஒரு பீஸ்

தயாரிக்கும் முறை:

1)முதலில் ஒரு பீஸ் சுக்கை தோல் நீக்கிவிட்டு கல்வத்தில் போட்டு இடித்து தூளாக்கி கொள்ள வேண்டும்.

2)அதன் பின்பு ஒரு கிளாஸ் பசும் பாலை பாத்திரம் ஒன்றில் ஊற்றி 10 மில்லி தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

3)இதை அடுப்பில் வைத்து பச்சை வாசனை போகும் வரை குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.பால் பச்சை வாடை நீங்கியதும் பொடித்து வைத்துள்ள சுக்குத் தூளை அதில் கொட்டி கலக்க வேண்டும்.

4)அதன் பிறகு ஒரு பில்டர் மற்றும் கிளாஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த சுக்கு பாலை அந்த கிளாஸிற்கு பில்டர் செய்து கொள்ள வேண்டும்.

5)பிறகு ஒரு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி நன்கு மிக்ஸ் செய்து பருகினால் இரவில் நிம்மதியான தூக்கம் வரும்.

தேவையான பொருட்கள்:

**சாமந்தி பூ – பத்து
**தேன் – ஒரு தேக்கரண்டி
**தண்ணீர் – ஒரு கிளாஸ்

தயாரிக்கும் முறை:

1)முதலில் சாமந்தி பூவை நன்கு காயவைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு சாமந்தி இதழ்களை தனித் தனியாக பிரித்து ஒரு ஈரமில்லாத டப்பாவில் கொட்டி சேகரித்துக் கொள்ள வேண்டும்.

2)அதன் பிறகு பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பின்னர் சேகரித்து வைத்துள்ள சாமந்தி இதழ்கள் சிறிதளவு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வையுங்கள்.

3)இந்த சாமந்தி தேநீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருகினால் நல்ல தூக்கம் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:

**பசும் பால் – ஒரு கிளாஸ்
**மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு

தயாரிக்கும் முறை:

1)பசும் பாலை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள்.பால் கொதி வரும் சமயத்தில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள்.

2)பால் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளுங்கள்.இந்த பாலை தினமும் இரவு பருகி வந்தால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.