ஈரோடு: கடந்த மாதம் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மூச்சி திணறல் காரணமாக அனுமதிக்கப்ட்டார். மேலும் ஒரு மாதம் காலம் மருத்துவமனையில் தங்கி இருந்த நிலையில் அவர் கடந்த மாதம் காலமானார். இந்த நிலையில் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி காலியானாதாக அறிவிக்கப்பட்டது.
அதனை அடுத்து அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி மாதம் 5-ம் தேதி இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைப்பெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வரும் 10-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் தலைமையில் நேற்று மையக்குழு கூட்டம் நடைபெற்றது. மேலும் இந்த கூட்டத்தில் அண்ணாமலை, வானதி சீனிவாசன், எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜன், எச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் என பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பற்றி பேச்சுவார்த்தை நடந்த பொழுது அதற்க்கு அண்ணாமலை வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த இடைத்தேர்தல் தனது கூட்டணி கட்சிகளுக்கு சீட் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.