உண்ட உணவு உடனே செரிமானமாக.. இந்த பருப்பை வாயில் போட்டு மெல்லுங்கள்!!

Photo of author

By Divya

இன்றைய கால உணவுப் பழக்கங்கள் முற்றிலும் ஆரோக்கியம் இல்லாதவகையில் இருக்கின்றது.தற்பொழுது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகள் தான் அனைவராலும் விரும்பப்படுகிறது.

நாம் உண்ணும் உணவில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்பதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.ஆனால் உணவில் சத்துக்கள் இருக்கின்றதோ இல்லையோ வாய்க்கு ருசியாக இருக்க வேண்டுமென்று அனைவரும் ஆரோக்கியத்தில் கோட்டை விட்டுவிடுகிறோம்.

தற்பொழுது ஜங்க் புட்,பாஸ்ட் புட்,பரோட்டா,பிரியாணி,சவர்மா,பானிபூரி போன்றவற்றை தான் மக்கள் தங்கள் தினசரி உணவாக எடுத்துக் கொள்கின்றனர்.இதுபோன்ற மோசமான உணவுகள் வயிறு,குடல் மற்றும் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கிறது.

உண்ணும் உண்வு எளிதில் செரிக்காவிட்டால் வாயுத் தொல்லை,மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.எனவே ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை மட்டும் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சிலருக்கு சில உடல் உபாதைகளால் ஆரோக்கியம் நிறைந்த உணவுகள் செரிமானமாகவே அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.இதுபோன்ற செரிமானப் பிரச்சனையை சந்தித்து வருபவர்கள் பிஸ்தா பால் பருகலாம்.

பிஸ்தா பருப்பு புரதம்,கால்சியம்,வைட்டமின் போன்ற பல ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது.பிஸ்தா பருப்பு பால் பருகி வந்தால் குடல் மற்றும் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்படும்.

பிஸ்தா பால் தயார் செய்வது எப்படி?

முதலில் 50 கிராம் அளவிற்கு பிஸ்தா பருப்பு எடுத்து வாணலியில் போட்டு சிறிது நேரம் வறுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து பாத்திரத்தில் 150 மில்லி பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அரைத்து வைத்துள்ள பிஸ்தா பருப்பு பொடி இரண்டு தேக்கரண்டி சேர்த்து கொதிக்க வைத்து பருகி வந்தால் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்படும்.