கிடு கிடு என உயர்ந்தது தங்கத்தின் விலை!! இந்த வருடம் இறுதிக்குள் ரூ.90 ஆயிரத்தை தொடும்!!

0
260
The price of gold soared! It will touch Rs.90 thousand by the end of this year!!
The price of gold soared! It will touch Rs.90 thousand by the end of this year!!

சென்னை: தங்கம் என்றல் யாருக்குதான் அணிந்து கொள்ள ஆசை வராது. இந்த நகை அணியும் வழக்கம் ஆதிகாலம் முதல் இருந்து வருகிறது. அதன் படி ஆதிகாலத்தில் ஒரு சவரன் தங்கம் விலை இந்த காலத்து குழந்தைகளின் ஒரு நாள் உணவு வாங்கி உண்ணும் விலையாக இருந்து உள்ளது. ஆனால் தற்போது நகைகளின் விலையை கேட்டால் தலை சுட்டற வைக்கிறது. அதற்க்கு காரணம் தற்போது அனைத்து மக்களின் சேமிப்பாக தங்கம் ஒரு அங்கமாக வகிக்கிறது.

இந்த நிலையில் தற்போது புது வருடம் தொடங்கி சில தினங்களில் 3 முறை தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதன் படி இந்த மாதத்தில் மட்டும் ரூ.640 உயர்ந்துள்ளது. ஆனால் நேற்று  சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை  சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.58,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.7,260-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 100  ரூபாய்க்கும் கிலோ பார் வெள்ளி  ஒரு லட்சத்திற்கும்  விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 58,280-க்கும் கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,285-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 101 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஒரு ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Previous articleமதுபானங்கள் மற்றும் பீர் விலை உயர்வு!! மது பிரியர்கள் அதிர்ச்சி!!
Next articleதிடீரென தலைநகரை மாற்றிய ஈரான்.. வெளியான அதிரடி முடிவு!! காரண பின்னணி என்ன??