மத்திய கிழக்கில் உள்ள பிராந்திய நாடுகளில் ஒன்று ஈரான். இங்கு பல வளங்கள் செழிக்கும் ஒரு நாடு. அதிலும் எண்ணெய் வளம் அதிகம் உள்ள நாடுதான் ஈரான். இந்து உள்ள மக்கள் தொகையின் எண்ணிக்கை 8.59 கோடி. ஈரான் தலைநகரான டெஹ்ரானில் மொத்தமாக ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.
இதனால் ஈரானில் பல பிரச்சினைகள் உருவாகி வருகின்றன. அதில் தண்ணீர் தட்டுப்பாடு மின் தட்டுப்பாடு போன்ற தட்டுப்பாடுகளால் மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் ஆண்டுதோறும் மக்கள் தொகை கூடி கொண்டே செல்கிறது. இதன் காரணமாகவே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் டெஹ்ரானில் தான் நிலநடுக்க அபாயம் அதிகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மக்களின் உயிரினை காக்கவும் மக்கள் இந்த பிரச்சனைகளில் இருந்து வெளிவரவும் தங்கள் தலைநகரை மக்ரானுக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தலைநகர் மாற்றம் குறித்த பேச்சு தற்போது எழுந்தது அல்ல நீண்ட நாட்களாக விவாதத்தில் இருக்கும் பேச்சுதான். தற்போது இந்த பிரச்சினைகள் காரணமாக தலைநகரை மாற்ற பரிசீலனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பேசு பேசுபொருளாகியுள்ளது.