சென்னை: சிறப்பு ரயில் முன்பதிவு டிக்கெட் காலை 8 மணிக்கு தொடங்கியது. மேலும் இந்த முன்பதிவு டிக்கெட் தொடங்கிய 10 நிமிடத்தில் முடிந்தது. ஆனால் சாதாரண பொது மக்கள் இப்படி வருடா வருடம் பண்டிகை காலங்களில் மக்கள் சொந்த ஊருக்கு செல்வத்ததற்கு கஷ்டப்படுவது தொடர்கிறது. ஆனால், அதை சரி செய்ய மத்திய மாநில அரசுகளால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் வருமானம் பார்க்கவே அரசுகள் விரும்புகின்றன.
தென் மாவட்ட மக்கள் இங்கே வந்து குவிவதற்கு என்ன காரணம்? போதிய தொழில் வாய்ப்புகள் அங்கே இல்லை. இருக்கும் கொஞ்ச தொழில்களிலும் போதுமான வருமானம் இல்லை. அதனால், வேறு வழியின்றி இடம் பெயர்கிறார்கள். இந்த நயவஞ்சக ஆட்சியாளர்கள் எல்லா தொழில்களையும் வட மாவட்டங்களில் குறிப்பாக சென்னையிலேயே தொடங்குகின்றனர். மேலும் தென்மாவட்டங்கள் அனைத்து ஆட்சி காலத்திலும் புறக்கணிக்கப்படுகின்றன.
ஆள்வோர் விமானங்களில், சொகுசு காரிலும் பவனி வர அவர்களுக்கு ஓட்டுப்போட்டு மக்கள் டிக்கெட்டே கிடைக்காமல் அலைந்து திரிந்து கஷ்டப்படுகிறார்கள். இப்படி கஷ்டப்படும் மக்கள் சிறிதாவது தேர்தல் நேரத்தில் சிந்தித்து வாக்களித்தால் இது போன்ற கஷ்டங்கள் கஷ்டப்பட தேவையில்லை. என்ன செய்வது ஆட்டுமந்தைகளாய் மாறிவிட்ட மக்களுக்கு என்னதான் கஷ்டப்பட்டாலும் டாஸ்மாக் உபயத்தால் புத்தி வேலை செய்யமாட்டேங்குது.