இதோட எல்லாம் முடிச்சிக்கலாம்.. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஓய்வு!! காரணம் என்ன??

0
216
Fast bowler of Indian team retires
Fast bowler of Indian team retires

cricket: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார்.

இந்திய அணியில் வாய்ப்புகள் கிடைக்காமல் ஏராளமான வீரர்கள் இருந்து வருகின்றனர். அதில் ஒருவர்தான் இந்த வருண் ஆரோன். இவர் சர்வதேச போட்டிகள் மற்றும் ஐ பி எல் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் இவர் தற்போது அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார் .

இந்திய அணியில் போதிய வாய்ப்புகள் கிடைக்காமல் ஓய்வை அறிவிக்கும் நிகழ்வு நடைபெற்று வருவது வழக்கம். அதேபோல் இவர் இந்திய அணிக்க 2011 அம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆகி இருந்தார். இவர் இதுவரை இந்திய டெஸ்ட் போட்டிகளில் 18 விக்கெட்டுகளையும், ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும் இதுவரை ஐ பி எல்  போட்டிகளில் மட்டும் 52 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் முதல் தர டெஸ்ட் போட்டியில் 103 இன்னிங்ஸில் 173 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.மேலும் அவர் 2015 ல் தான் கடைசியாக இந்திய அணிக்காக விளையாடினார். அதன் பிறகு புதிய வீரர்களின் எழுச்சியின் காரணமாக இந்திய அணியில் போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன் பின் உள்ளூர் போட்டியில் மட்டும் விளையாடி வந்தார். தற்போது அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் முழுவதுமான ஓய்வை அறிவித்துள்ளார்.

Previous articleஅமெரிக்கா-கனடா இணைவு உறுதி.. உதவிக்கு வந்த தீயணைப்பு விமானம்!! நடந்தது என்ன??
Next articleவிராட் க்கு தடை போடுங்க.. அவர் செய்ததை ஏற்றுகொள்ள முடியாது!! கொந்தளித்த இங்கிலாந்து வீரர்!!