cricket: இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் விராட் கோலி ஆஸ்திரேலிய தொடரில் நடந்து கொண்டது குறித்து இங்கிலாந்து வீரர் கடுமையான விமர்சனம்.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி முடித்து. இந்திய அணி இந்த தொடரில் 4 போட்டிகளில் வெல்ல வேண்டிய நிலையில் களமிறங்கியது. ஆனால் இந்திய அணி இந்தத் தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது.
இந்த ஒரு போட்டியில் வென்ற காரணத்தால் மட்டுமே மீதி போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து விட்டது. அதனால் இந்திய அணி வெளியேறியது இதனை தொடர்ந்து இந்திய அணி அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ளது.அடுத்து டெஸ்ட் அணியின் கேப்டன் யார் என கருத்தும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து வீரர் ஸ்டீவன் ஹார்மிசன் கறுத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் எனக்கு எந்த அளவுக்கு விராட் கோலியை பிடிக்கும் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி இடையிலான போட்டியில் அவர் ஆஸ்திரேலிய இளம் வீரர் கொன்ஸ்டாஸ் உடன் மோதினார். இத மோதலை அனைவரும் விமர்சித்த நிலையில் அவரை போட்டியில் இருந்து தடை செய்ய வேண்டும் ஆனால் 20% வரி மட்டுமே வசூலித்து என கடுமையாக விமர்சனகளை கூறியுள்ளார்.