இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் சமீபத்தில் நடந்து முடிவடைந்தது. இந்த தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. இதனால் முக்கிய வீரர்கள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த ஆஸ்திரேலிய தொடரின் மூன்றாவது போட்டியானது சமனில் முடிவடைந்தது. இந்த போட்டி முடிவடைந்த பின் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவி அஸ்வின் ஓய்வை அறிவித்தார். இதை யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக பார்க்கப்பட்டது. எனினும் இந்த தொடர் தொடங்கும் முன் அவர் இந்த முடிவை எடுத்ததாகவும் அதனால் தான் இரண்டாவது போட்டியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் அணியில் அவமானப்படுத்தப்பட்டார் அதனால் தான் அவர் வேறு வழியின்றி அணியில் இருந்து வெளியேறினார். அவர் அணியில் மூத்த அனுபவம் மிக்க ஒரு வீரர். ஆனால் அவர் அணியில் இருந்த போதும் வாஷிங்டன் சுந்தர் க்கு நியூசிலாந்து தொடரில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அதிக ஓவர்கள் வீசினார். மேலும் இவர் அணியில் இருக்கும் போது இவ்வாறு செய்வது இவரை அவமானப் படுத்துவது தான். அதனால் தான் அவர் வெளியில் சொல்லாமல் ஓய்வை அறிவித்தார். நிச்சயம் ஒரு நாள் அவரே இந்த உண்மைகளை சொல்வார் என கூறியுள்ளார்.