முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசியபோது, டங்ஸ்டன் திட்டம் வராது. அது வந்தால் நான் இந்த பதவியில் இருக்கமாட்டேன் என தெளிவாக கூறினார்.
அவர், ஒன்றிய அரசு நிதிச்சுமையையும் சமாளித்து, மக்களுக்கான பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறோம். எப்போது இல்லாத அளவு மக்களின் நலனுக்காக திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்” என்றார்.
மேலும், அவர், “எதிர்க்கட்சித் தலைவர் தமிழக அரசின் கடன் சுமையும், வெட்டி செலவுகளையும் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் நிதியமைச்சர் ஏற்கனவே அதை விளக்கி விட்டார். இதுதான் மக்கள் நலனுக்கான முதல் priority ஆக இருக்கின்றது” என்று கூறினார்.
அதிமுக கட்சி டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ஆதரித்து, மாநில உரிமையை ஒன்றிய அரசு பறிக்கும் சட்டத்தை ஆதரித்ததாக குற்றம் சாட்டினார். “நாங்கள் அந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் எதிர்த்தோம்,” என்றார். இதற்கு பதிலாக, அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். அவர், “துரோகம் என்ற வார்த்தையை எடுத்துக்கொண்டு ஆதரித்தார்கள்” என்று கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நான் சட்டமன்றத்தில் தெளிவாக கூறியுள்ளேன், டங்ஸ்டன் திட்டம் வராது. ஆனால் அதை மீறி மக்களை குழப்புவது தவறானது என்று கூறினார். குளிர் காயபவர்கள் இதன் தாக்கம் அனுபவிப்பார்கள் என்று சொல்லி, இதை மீறி மக்களுக்கு குழப்பம் ஏற்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை அளித்தார்.