ஜெயம் ரவி நடிப்பில், சமீபத்தில் நடித்து வெளியாக உள்ள திரைப்படம் தான் காதலிக்க நேரமில்லை. இந்தப் படத்தில் பாடல்கள் வெளியாகி நல்ல ஹிட் கொடுத்துள்ளது. இந்த படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இயக்குனர் கிருத்திகா உதயநிதி ஆவார். இந்த பட ப்ரமோஷன் விழாவில் கலந்து கொண்ட ஜெயம் ரவி, தன்னை பற்றி இதில் பேச விரும்புவதாக கூறி அங்குள்ளவர்களிடம் பர்மிஷன் வாங்கி பேசியுள்ளார்.
தற்போது நான் நடித்துள்ள இந்த படத்திற்கும் பெண் இயக்குனர் தான். அடுத்ததாக நான் நடிக்கப் போகும் படத்திற்கும் சுதா கொங்குரா என்ற பெண் இயக்குனர் தான். இதன் மூலம் அவர், பெண்கள் இல்லாமல் ஆண்களுக்கு அர்த்தமில்லை, அதேபோல், ஆண்கள் இல்லாமல் பெண்களுக்கும் அர்த்தம் இல்லை என்று அவர் கூறியுள்ளார். இதை நான் ஷாருக்கான் சாரிடம் இருந்து தான் காப்பி அடித்தேன் என்று மேடையிலேயே கூறியிருந்தார். பெண்களை முன்னிறுத்தி நானும் தற்பொழுது படம் நடித்து வருகிறேன். இந்தப் படத்தில் ஒவ்வொரு விஷயங்களும் இந்த காலத்து ஜெனரேஷனுக்கு புரியும்படி அவ்வளவு நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்திருந்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு வெளிவந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தராத நிலையில், வெற்றியும், தோல்வியும் கண்டிப்பாக வேண்டும். தோல்வி கண்டு, துவண்டு விடாமல், எழுந்து தொடர்ச்சியாக போராடுவதே வெற்றி என கருதுவதாக கூறினார். கடந்த 2014 இல் எனது அடுத்தடுத்த படங்கள் தோல்வி கண்டது. அதைக் கண்டு நான் துவண்டு போகாமல், அடுத்த ஆண்டே மூன்று வெற்றி படங்களை அடுத்தடுத்து கொடுத்துள்ளேன் என்றார்.
அவருடைய பாசிடிவ் ஸ்பீக்கிங், இப்பொழுது வலைதளங்களில் பெரும்பாலும் பகிரப்பட்டு வருகின்றது. நான் துவண்ட காலங்களில் நான் என்னைப் பற்றி நானே ஆராய்ந்து கொள்வேன். இதில் நாம் என்ன தவறு செய்தோம் என பார்ப்பேன். தவறு செய்தால் திருத்திக் கொள்வேன் இல்லையேல், அடுத்த வேலையை பார்த்துக் கொண்டு நகர்வேன் என்று இன்ஸ்பிரேஷன் ஆக பேசி உள்ளார்.