அசாம் மாநிலத்தில் HMPV வைரஸ் ஆனது பிறந்து 19 மாதமான குழந்தைக்கு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை இந்தியாவில் 14 பேருக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
கொரோனா வைரஸை தொடர்ந்து தற்பொழுது சீனாவில் இருந்து இந்த HMPV வைரஸ் ஆனது இந்தியாவில் பருவ தொடங்கியுள்ளது. இதற்கான அறிகுறிகளாக இருமல், தும்மல், தலைவலி மற்றும் மூச்சுத் திணறல் கூறப்பட்டுள்ளது.
இந்த HMPV வைரஸ் ஆனது பெரும்பாலும் இளம் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை அதிகளவு தாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கவில்லை என்றாலும் இந்த நோயினால் பெரிதளவு பாதிப்புகள் இருக்காது என அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் ஏற்கனவே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். மேலும் அவர், இனிவரும் காலங்களில் நோயுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்பதை மேற்கோள் காட்டி இனி வரும் காலங்களில் நோயுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்பதை மேற்கோள் காட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
HMPV வைரஸ் இருக்கு மருந்துகள் இல்லை என்றாலும் இதன் மூலம் வரக்கூடிய காய்ச்சலானது 3 முதல் 6 நாட்களில் குணமாகிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் தொற்றுக்களில் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள எப்பொழுதும் சுத்தமாக இருத்தல் மிக முக்கியமான ஒன்றாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் வந்த பொழுது நாம் மேற்கொண்ட மாஸ் கனிதல் மற்றும் அடிக்கடி கைகளை கழுவுதல் முகத்தை கழுவுதல் போன்ற செயல்களை இந்த HMPV வைரஸ் தோற்றிருக்கும் மேற்கொண்டோம் என்றால் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.