காரசாரமான உணவுகளை தொடர்ந்து உட்கொள்வதாலும் தாமதமாக உணவு எடுத்துக் கொள்வதாலும் வயிற்றில் புண்கள் உருவாகிறது.காலை நேர உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ள தவறினால் வயிற்றில் உள்ள அமிலங்கள் அதிகளவு நொதித்து புண்களை ஏற்படுத்தும்.
தற்பொழுது அல்சர் புண்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படுகிறது.யாரெல்லாம் உணவின் மீது அக்கறை செலுத்த தவறுகிறார்களோ அவர்களுக்கு அல்சர் நிச்சயம் ஏற்படும்.அல்சர் வந்த பிறகு மலம் கழிப்பதில் சிரமத்தை சந்திக்க நேரிடும்.
காலை நேரத்தில் வயிறு எரிச்சலுடன் மலம் கழிப்பது,வயிறு வலி,வயிறு உப்பசம்,மலத்தின் நிறம் கருமையாக இருத்தல் போன்றவை அல்சரின் அறிகுறிகளாகும்.
அல்சர் பாதிப்பை குணமாக்கும் அரிசி கஞ்சி தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
அரிசி கஞ்சி செய்முறை:
தேவைப்படும் பொருட்கள்:-
1)புழுங்கல் அரிசி – கால் கப்
2)உப்பு – அரை தேக்கரண்டி
செய்முறை:-
முதலில் கால் கப் அளவிற்கு புழுங்கல் அரிசி எடுத்து வாணலியில் போட்டு பொரிந்து வரும் வரை வறுக்க வேண்டும்.
பிறகு இதை ஆறவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.
அதன் பிறகு அரைத்த அரிசி மாவை கொட்டி கிண்டவும்.அரிசி வேகும் வரை கொதிக்க வைத்து அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.
பிறகு அரிசி கஞ்சியை சிறிது நேரம் ஆறவிட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து பருக வேண்டும்.இந்த அரிசி கஞ்சியை தொடர்ந்து பருகி வந்தால் அல்சர் புண்கள் குணமாகிவிடும்.
மற்றொரு தீர்வு:
தேவையான பொருட்கள்:-
1)பசுந் தயிர் – மூன்று தேக்கரண்டி
2)வேப்பங்கொழுந்து சாறு – இரண்டு தேக்கரண்டி
செய்முறை:-
சிறிதளவு வேப்பங் கொழுந்து எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு கிண்ணத்தில் மூன்று தேக்கரண்டி பசுந் தயிர் ஊற்றி அரைத்த வேப்பங் கொழுந்து சாறு சேர்த்து சாப்பிட்டு வந்தால் அல்சர் புண்கள் ஆறிவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)மோர் – ஒரு கிளாஸ்
2)வெந்தயம் – கால் தேக்கரண்டி
செய்முறை:-
முதலில் வெந்தயத்தை வாணலியில் போட்டு வறுத்துக் கொள்ளவும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.இந்த பொடியை ஒரு கிளாஸ் மோரில் கலந்து பருகி வந்தால் அல்சர் புண்கள் குணமாகிவிடும்.