இன்று பெரும்பாலானோர் உடலுறவில் நாட்டமில்லாமல் இருக்கின்றனர்.இதனால் ஹார்மோன் குறைபாடு,உறவில் விரிசல்,அன்பு குறைந்து அடிக்கடி சண்டை வருதல் போன்றவற்றை சந்திக்க நேரிடுகிறது.
பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணம்,பணிச்சுமை,மன அழுத்தம் போன்ற காரணங்களால் உடலுறவில் நாட்டம் குறைகிறது.பாலியல் ஹார்மோன் குறைந்தாலும் இந்த பிரச்சனை ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே பாலியல் ஆசையை தூண்டும் உணவுகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.பழங்கள்,உலர் விதைகள் பாலியல் ஆர்வத்தை அதிகரிக்க உதவுகிறது.குங்குமப்பூவை பாலில் கலந்து பருகி வந்தால் பாலியல் தூண்டல் அதிகரிக்கும்.
பேரிச்சம் பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் பாலியல் உணர்வு அதிகரிக்கும்.வாழைப்பழத்தை பொடியாக நறுக்கி பாலில் கலந்து பருகி வந்தால் பாலியல் உணர்வு அதிகரிக்கும்.பாதாம் மற்றும் முந்திரி பருப்பை வறுத்து பொடித்து பாலில் கலந்து பருகி வந்தால் பாலியல் தூண்டல் அதிகரிக்கும்.
தேங்காயை அரைத்து பால் எடுத்து பாதாம் பருப்பு பொடி கலந்து பருகி வந்தால் பாலியல் உணர்ச்சி அதிகமாகும்.அத்தி பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுறவு கொள்ளும் ஆசை அதிகரிக்கும்.
முருங்கை பருப்பை பொடித்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் பாலியல் ஆர்வம் அதிகரிக்கும்.முருங்கை பிசின் மற்றும் பாதாம் பிசினை பொடித்து பாலில் கலந்து பருகி வந்தால் பாலியல் ஹார்மோன் வளர்ச்சி அதிகரிக்கும்.
ஓரிதழ் தாமரை இதழை பொடித்து சூடான பாலில் கலந்து பருகினால் பாலியல் உணர்ச்சி அதிகரிக்கும்.அஸ்வகந்தா பொடியை நீரில் கலந்து குடித்து வர உடலுறவின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.
தினமும் 10 உலர் திராட்சை சாப்பிட்டு வந்தால் பாலியல் ஆசை அதிகமாகும்.வெந்தயத்தை பொடித்து பாலில் கலந்து பருகி வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.சாக்லேட் சாப்பிட்டால் பாலியல் உணர்வு அதிகமாகும்.