வீசிங் பிரச்சனை உள்ளவர்களுக்கு பெஸ்ட் ஹோம் ரெமிடி இது தான்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

0
135

நெஞ்சில் அதிகப்படியான சளி கோர்த்தல்,ஆஸ்துமா,நுரையீரல் சம்மந்தபட்ட நோய் பாதிப்புகள் போன்றவற்றால் வீசிங் பிரச்சனை ஏற்படுகிறது.இதை மூச்சுத் திணறல் என்று சொல்வார்கள்.வீசிங் இருந்தால் மூச்சுக்குழாயில் கடுமையான பாதிப்புகள் ஏற்படும்.

ஒவ்வாமை இருப்பவர்களுக்கு அடிக்கடி வீசிங் பிரச்சனை ஏற்படும்.காற்று மாசால் அதிகமானோர் மூச்சுத்திணறல் பாதிப்பை எதிர்கொள்கின்றனர்.நெஞ்சு இறுக்கம்,மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை வீசிங் பிரச்சனைக்கான அறிகுறிகளாகும்.

வீசிங்கை குணப்படுத்தும் ஹோம் ரெமிடி:

1)கரு மிளகு
2)திப்பிலி
3)வெற்றிலை

முதலில் கால் தேக்கரண்டி கரு மிளகு எடுத்து உரலில் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள்.

பிறகு ஒரு திப்பிலியை இடித்து பொடியாக்கி அதில் சேருங்கள்.அதன் பிறகு ஒரு வெற்றிலையை காம்பு நீக்கிவிட்டு அதில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் வீசிங் பிரச்சனை சரியாகும்.

1)சூடம்
2)தேங்காய் எண்ணெய்

ஒரு தாளிப்பு கரண்டியில் 20 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள்.

பிறகு ஒரு சூடத்தை இடித்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி லேசாக ஆறவிட்டு மார்பு பகுதியில் தடவினால் வீசிங் பாதிப்பு குணமாகும்.

1)இஞ்சி
2)தேன்
3)துளசி

முதலில் ஒரு சிறிய துண்டு இஞ்சி எடுத்து தோல் நீக்கிவிட்டு தட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி தட்டி வைத்துள்ள இஞ்சி,பத்து துளசி இலைகளை போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து பருகினால் வீசிங் பாதிப்பு குணமாகும்.

1)வெற்றிலை
2)துளசி

பாத்திரத்தில் 100 மில்லி தண்ணீர் ஊற்றி ஒரு வெற்றிலை மற்றும் ஐந்து துளசி இலைகளை போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் வீசிங் பாதிப்பு சரியாகும்.

1)வெற்றிலை
2)மிளகு

ஒரு வெற்றிலையை எடுத்து காம்பு நீக்கிவிட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.அடுத்து இரண்டு மிளகை உரலில் போட்டு இடித்து தூளாக்கி வெற்றிலை சாறில் கலந்து பெருகினால் வீசிங் பிரச்சனை சரியாகும்.

Previous articleவீடு துடைக்க பயன்படுத்தும் MOP-இல் படிந்துள்ள அழுக்குகளை சுலபமாக க்ளீன் செய்ய உதவும் டிப்ஸ்!!
Next articleபொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு முன் இதை மட்டும் மறக்காமல் செய்துவிடுங்கள்!!