மீண்டும் மீண்டும் பள்ளிகளில் தொடரும் அவலங்கள்!! கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்!!

Photo of author

By Gayathri

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே இருக்கக்கூடிய பெருங்காடு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலக்கூடிய மாணவிகளை வைத்து அங்குள்ள கழிப்பறைகள் சுத்தம் செய்யப்பட்ட வீடியோ தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்தப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கலைவாணி மற்றும் இவருடன் இன்னும் 5 ஆசிரியர்கள் இந்த அரசு பள்ளியில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த பள்ளியில் பயில வரும் மாணவ மாணவியர் அருகில் உள்ள மலை கிராமங்கள் மற்றும் பழங்குடியினர் ஆவர்.

தற்பொழுது இந்த பள்ளி குறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் 3 சீருடை அணிந்த மாணவிகள் அரசு பள்ளியின் உடைய கழிவறைகளை கால்களில் செருப்பு கூட இல்லாமல் சுத்தம் செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதிலும் இந்த மாணவிகள் பழங்குடியின மாணவிகள் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த மாணவிகளுடைய பெற்றோர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். அந்தப் பள்ளியின் உடைய ஆசிரியர்கள் தான் மாணவிகளை இவ்வாறு கழிவறையை சுத்தம் செய்ய சொல்லி வற்புறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இது குறித்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அதிகாரிகளுக்கு தெரிந்தவுடன் அதிகாரிகள் விசாரணை நடத்தி இந்த பள்ளியின் தலைமை ஆசிரியரான கலைவாணியை உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.