நமக்கு ஏற்படும் உடல் நலக் கோளாறை குணப்படுத்திக் கொள்ள மருத்துவரை அணுக வேண்டிய அவசியம் இனி ஏற்படாது.உடல் உபாதைகளுக்கு சிறந்த கை மருந்து குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இதை தெரிந்து கொண்டு முழு பலனடையுங்கள்.
*ஜலதோஷம் மற்றும் இருமல்
நட்சத்திர சோம்பு,பட்டை,இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு பானம் செய்து பருகினால் ஜலதோஷம்,இருமல் குணமாகும்.
*முகப் பொலிவு
துளசி,புதினா இலையை அரைத்து முகத்தில் பூசி குளித்து வந்தால் பொலிவு கிடைக்கும்.
*வயிறு உபாதைகள்
வெந்தயத்தை நெயில் வறுத்து பொடித்து சாப்பிட்டு வந்தால் வயிறு உபாதைகள் முழுமையாக குணமாகும்.
*தொண்டை கிச் கிச்
ஏலம்,சுக்கு மற்றும் திப்பிலியை இடித்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.
*கருமை முடி
கசகசாவை தண்ணீரில் ஊறவைத்து பேஸ்டாக அரைத்து தலைக்கு அப்ளை செய்து குளித்து வந்தால் முடி கருமையாக வளரும்.
*வாயுத் தொல்லை
சோம்பு விதைகளை வெறும் வாயில் மென்று சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.ஓமத்தை பொடித்து தினமும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.
*குமட்டல்
எலுமிச்சை மற்றும் இஞ்சியை இடித்து சாறு எடுத்து பருகினால் குமட்டல் பிரச்சனை சரியாகும்.
*செரிமான சிக்கல்
நெல்லிக்காயை இடித்து சாறு எடுத்து பருகி வந்தால் செரிமானப் பிரச்சனை சரியாகும்.பட்டை தேநீர் செரிமான சிக்கலை சரி செய்ய உதவுகிறது.
*எலும்பு முறிவு
முருங்கை கீரையை நெயில் வதக்கி சாப்பிட்டு வந்தால் எலும்பு முறிவு பாதிப்பு குணமாகும்.
*இரத்த அழுத்தம்
திப்பிலியை வைத்து கசாயம் செய்து குடித்து வந்தால் இரத்த அழுத்தம் குணமாகும்.
*கண் பார்வை குறைபாடு
சித்தரத்தையை பொடித்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவுபெறும்.
*ஆஸ்துமா
கருஞ்சீரத்தை பொடித்து பாலில் கலந்து பருகி வந்தால் ஆஸ்துமா பாதிப்பு குணமாகும்.
*இரத்தப் போக்கு
ஏலக்காயை இடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பருகினால் இரத்தப்போக்கு குணமாகும்.
*மூட்டு வலி
பிரண்டையை உலர்த்தி பொடித்து தேநீர் செய்து பருகி வந்தால் மூட்டு வலி குணமாகும்.
*கால் பாத வலி
வெள்ளை எருக்கன் இலையை அரைத்து மஞ்சள் தூள் சேர்த்து பாத்தாங்களில் அப்ளை செய்து வந்தால் அவை சீக்கிரம் குணமாகிவிடும்.