தமிழ்நாட்டில் உள்ள திருமண மண்டபங்கள், பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் பார்ட்டி ஹால்களின் மின் கட்டணத்தை உயர்த்த இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
TNPDCL ஹால்களுக்கான மின் கட்டணத்தையும் உயர்த்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக இந்த ஹால்களில் பெரிய மற்றும் அலங்கார விளக்குகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் மட்டுமே இந்த மின்கட்டண உயர்வானது அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளில் ஏற்பட்ட அதிக கடுமையான இழப்பை ஈடு செய்யும் விதமாக 5% கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண உயர்விற்கான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் :-
✓ ஆடம்பர விளக்குகள் மற்றும் பிரம்மாண்ட வெளிச்சத்துடன் செயல்படக்கூடிய பெரிய வணிக நிறுவனங்களுக்கு இந்த 5% மின்கட்டண உயர்வு பொருந்தும்.
✓ திருமண மண்டபங்கள் மற்றும் மாநாட்டு மையங்களில் அலங்கார விளக்குகளுக்கென தனி இணைப்பு பெற்றெடுத்தல் வேண்டும்.
✓ TNERC இன் கட்டண உத்தரவின்படி, எந்த ஒரு பெரிய நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் ஆடம்பரம் மற்றும் அலங்கார விளக்குகள் பயன்படுத்தப்படுதோ அங்கு கண்டிப்பாக இந்த மின் கட்டண உயர்வு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அலங்காரம் மற்றும் பெரிய மின் விளக்குகள் பயன்படுத்தப்படவில்லை என்றால் அங்கு மின்கட்டண உயர்வு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு :-
சமீபத்திய ஆய்வின்படி 13,324 நிறுவனங்கள் மண்டபங்கள் இந்த திட்டத்திற்கான ஆய்வு மேற்கொள்ளப்படாமல் உள்ளதாகவும், சீக்கிரமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மின்கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.