வளர்ந்து வரும் இந்த நவீன காலகட்டத்தில் ஏஐ தொழிட்நுட்பமும் மிகப்பெரும் அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இது குறிப்பிட்ட நேரத்தில் பல மனிதர்கள் இணைந்து வேலை பார்க்கும் வேலையை சுலபமாக பார்த்து முடிக்கும். இதனால், பெரும் நிறுவனங்களில் ஏ ஐ தொழில்நுட்பத்தை பெரிதும் வரவேற்கின்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் google நிறுவனம் பெருமளவு ஊழியர்களை வேலை நிறுத்தம் செய்துள்ளது. அதன் பின்னும் தொடர்ச்சியாக பணியாளர்களை செலவினத்தை குறைக்கும் வகையில் வேலை நிறுத்தம் செய்து வருகின்றது.
இதனை தொடர்ந்து தற்போது மெட்டா நிறுவனமும் இந்த வருட இறுதிக்குள் தனது ஊழியர்களில் 5% பணியாளர்களை வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது. இதனால் அந்நிறுவன ஊழியர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் ஏ ஐ தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் தான். மெட்டா நிறுவனமும் பெர்பார்மன்ஸ் அடிப்படையில் வருடந்தோறும் தனது ஊழியர்களை வேலை நிறுத்தம் செய்து வருகின்றது. அதன்படி, இந்த வருடமும், தாம் வேலை நிறுத்தம் செய்யப் போகும் ஊழியர்களின் பட்டியல் பிப்ரவரி மாதம் இறுதிக்குள் வெளியாகும் என அந்நிறுவன உரிமையாளர் மார்க் ஜீக்கர்பெர்க் தகவலை வெளியிட்டுள்ளார்.
இவரது நிறுவனங்களான வாட்சப், இன்ஸ்டாகிராம்,பேஸ்புக் செயலிகளில் பணிபுரியும் நடுத்தர அல்லது மூன்றாம் நிலை மென்பொறியாளர்களை அவர்களுக்குரிய இழப்பீடு வழங்கி வேலை நிறுத்த போவதாக அந்நிறுவன வெப்சைட்களில் செய்தியை வெளியிட்டுள்ளது. அவர்களின் ஊழியர்களில் 72,000 பேரில் 5 சதவீதம் என்பது 3600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.