புதிய முறையில் கதை கூறிய இயக்குனர்!! ஓவியங்களை கண்டு ஒத்துக் கொண்ட தயாரிப்பாளர்!!

0
130
The director told the story in a new way!! The producer agreed after seeing the paintings!!
The director told the story in a new way!! The producer agreed after seeing the paintings!!

1990 ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்தின் நடிப்பில் இயக்குனர் ஆர் கே செல்வமணி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ” புலன்விசாரணை ” . விஜயகாந்த் அவர்களின் தொடர் தோல்விக்கு அடுத்து மிகப்பெரிய வெற்றியை தேடி தந்த படமாக இத்திரைப்படம் அறியப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் டூயட் சாங் இல்லாமல் விஜயகாந்த் அதற்கு ஜோடி இல்லாமல் இளையராஜாவின் இசையில் இரண்டே இரண்டு பாடல்கள் மட்டும் மற்றும் மற்றும் ரத்தத்தை உரைய செய்யக்கூடிய காட்சிகளாக மனிதர்களைக் கொண்டு தெரியாத அளவிற்கு சுவரில் வைத்து பூசுவது போன்ற பல விஷயங்கள் புதுமையாக மேற்கொள்ளப்பட்டவை. இதுபோன்ற காரணங்களுக்காகவே ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் திரைப்படமாக புலன் விசாரணை அமைந்துள்ளது.

இந்த திரைப்படத்திற்காக ஆர் கே செல்வமணி செய்த சில முக்கிய தகவல்களை பார்க்கலாம் :-

ஆர்கே செல்வமணி அவர்கள் ஆரம்ப காலத்தில் இந்த கதையை எடுத்துக் கொண்டு தயாரிப்பாளர் ராவுத்தரிடம் சென்று இருக்கிறார். அப்பொழுது கதையைக் கேட்ட தயாரிப்பாளர் விஜயகாந்த் இன்னும் 2 வருடங்களுக்கு பிஸியாக இருக்கிறார் என்று கூறி திருப்பி அனுப்பி வைத்துள்ளார். எனினும் சோர்ந்து போகாத இயக்குனர் இத்திரைப்படத்தினுடைய காட்சிகளை ஓவியங்களாக வரைந்து அதனை தயாரிப்பாளர் ராவுத்தரிடம் சென்று கொடுக்க, இதைப் பார்த்த அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்த உடனே இந்த திரைப்படத்திற்கு ஓகே சொல்லி இருக்கிறார்.

இப்படிப்பட்ட கதையின் உடைய கதை பின்புலத்தை கொண்ட புலன்விசாரணை திரைப்படம் ஆனது கிரைம் தில்லர் திரைப்படமாக அக்காலகட்டத்தில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. மேலும், பெரும்பாலான நடிகர்களுக்கு அவர்களுடைய 100 ஆவது படம் தோல்வியையே சந்திக்கும் நிலையில் கேப்டன் பிரபாகரன் என்ற திரைப்படம் விஜயகாந்த் அவர்களுக்கு 100 ஆவது படமாக மட்டுமல்லாது கேப்டன் என்ற பெயரினை பெற்று கொடுத்த திரைப்படமாகவும் அமைய காரணமாக அமைந்ததும் ஆர் கே செல்வமணி தான்.

Previous articleஆச்சியை கண்டு அசந்து போய் நின்ற இயக்குனர்!! இப்படி ஒரு திறமையா!!
Next articleபொள்ளாச்சி பலூன் திருவிழாவில் மீண்டும் பரபரப்பு!!