உடல் எடையை குறைக்கும் வாழைப்பழ பால்!! தினம் ஒரு கிளாஸ் குடிங்க.. 30 நாளில் பலனை காணுங்கள்!!

Photo of author

By Divya

உடல் எடையை குறைக்கும் வாழைப்பழ பால்!! தினம் ஒரு கிளாஸ் குடிங்க.. 30 நாளில் பலனை காணுங்கள்!!

Divya

அதிகப்படியான கொழுப்பு சேர்வதால் உடல் எடை கூடுகிறது.இந்த பிரச்சனையை தற்பொழுது பலரும் அனுபவித்து வருகின்றனர்.உடலில் படியும் அதிகப்படியான கொழுப்பை கரைக்க ஆபத்தான டயட் முறைகள் பின்பற்றுவதை தவிர்க்கவும்.

உடல் எடை அதிகரிக்க காரணங்கள்:

*துரித உணவு உட்கொள்ளுதல்
*எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உட்கொள்ளுதல்
*சோம்பேறி வாழ்க்கை முறை
*உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல்
*பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளுதல்
*ஒரே இடத்தில் உட்கார்ந்த நிலை வாழ்க்கை முறை

வாழைப்பழம்,பால்,நிலக்கடலை உள்ளிட்ட பொருட்களை கொண்டு ஸ்மூத்தி செய்து பருகி வந்தாலே ஒரு மாதத்தில் உடல் எடை கடகடவென்று குறைந்துவிடும்.அதேபோல் உடலுக்கு தேவையான இம்யூனிட்டி பவர் கிடைக்க இந்த பானம் பெரிதும் உதவும்.டீ,காபி செய்யும் நேரத்தில் இந்த பானத்தை தயாரித்துவிடலாம்.உடல் பருமனால் அவதியடைந்து வருபவர்கள் இந்த வாழைப்பழ பாலை பருகி வந்தால் நிச்சயம் நல்ல பலனை காண முடியும்.

தேவையான பொருட்கள்:

1)வாழைப்பழம் – ஒன்று
2)நிலக்கடலை – ஒரு தேக்கரண்டி
3)பேரிச்சம் பழம் – இரண்டு
4)காபித் தூள் – கால் தேக்கரண்டி
5)பால் – ஒரு கிளாஸ்
6)பனங்கற்கண்டு – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:

*கனிந்த வாழைப்பழம் ஒன்றை தோல் ஒன்றை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

*அடுத்து நிலக்கடலையை வறுத்து மிக்சர் ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ள வேண்டும்.

*பிறகு இரண்டு பேரிச்சம் பழத்தை விதை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

*பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள வாழைப்பழத் துண்டுகளை போட்டுக் கொள்ள வேண்டும்.

*பொடித்து வைத்துள்ள நிலக்கடலையை அதில் கொட்டி கலந்துவிட வேண்டும்.அதற்கு அடுத்து காபித் தூள்,பேரிச்சம் பழம் மற்றும் இனிப்பு சுவைக்காக பனங்கற்கண்டு சேர்த்து கெட்டியாகும் வரை சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இந்த பாலை சிறிது நேரம் ஆறவிட்டு சாப்பிட வேண்டும்.இந்த பாலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைந்துவிடும்.