பருவம் அடைந்த பெண்கள் குடிக்க வேண்டிய பானம்!! தினம் ஒரு கிளாஸ் செய்து குடிங்க.. ஒரே மாதத்தில் பலன் கிடைக்கும்!!

0
76

வளரும் பெண் பிள்ளைகள் அவர்கள் பருவமடைந்த பிறகு உடல் சார்ந்த பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க கருப்பு உளுந்தை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பு உளுந்து களி,வெந்தயக் களி செய்து கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் கருப்பு உளுந்து,சீரகம் உள்ளிட்ட சில பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் உளுந்து பொடியை நீரில் காய்ச்சி குடித்து வந்தால் இடுப்பு எலும்பு இரும்பு போன்ற வலிமையை பெறும்.

தேவையான பொருட்கள்:-

1)கருப்பு உளுந்து – 2 தேக்கரண்டி
2)சீரகம் – ஒரு தேக்கரண்டி
3)பெருங்காயம் – கால் தேக்கரண்டி
4)கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து கருப்பு உளுந்து போட்டு கருகிடாமல் பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

இதற்கு அடுத்து ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதையை போட்டு மிதமான சூட்டில் வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பின்ச் கட்டி பெருங்காயத்தை அதில் போட்டு வறுத்து ஆறவிடவும்.பிறகு மிக்சர் ஜாரில் இந்த பொருட்கள் அனைத்தையும் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் சூடுபடுத்தவும்.பின்னர் அரைத்து வைத்துள்ள பொடியை அதில் கொட்டி கொதிக்க வைத்து குடித்து வந்தால் எலும்புகள் வலிமை பெறும்.

கருப்பு உளுந்தில் உள்ள கால்சியம்,இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலை வலிமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.கருப்பு உளுந்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.பருமடைந்த பெண்களுக்கு கருப்பு உளுந்து களி,உளுந்து லட்டு,உளுந்து பொடி செய்து கொடுத்தால் இடுப்பு வலி,மாதவிடாய் வலி போன்றவற்றை அவர்கள் சந்திக்காமல் இருப்பார்கள்.

Previous articleஅரசு ஊழியர்கள் வந்தே பாரத்தில் இலவசமாக பயணிக்கலாம்!! மத்திய அரசு!!
Next articleஆசனவாயில் அடைத்துக் கொண்டுள்ள மலத்தை வெளியேற்ற.. தயிருடன் இந்த பொருளை சேர்த்து சாப்பிடுங்கள்!!