விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய லொள்ளு சபாவின் மூலம் அறிமுகமாகி நடிகர் சிம்புவின் உதவியால் வெள்ளித்திரையில் காமெடி நடிகராக அறிமுகமானவர் தான் நடிகர் சந்தானம். காமெடி நடிகர் ஆக கலக்கி வந்த நடிகர் சந்தானம் அவர்கள், திடீரென இனி ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என தன்னுடைய பாதையை மாற்றிக் கொண்டார்.
இவருடைய நடிப்பில் உருவான மதகஜ ராஜா திரைப்படமானது 12 ஆண்டுகளுக்குப் பின் தற்பொழுது வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நிலையில், ரசிகர்கள் அனைவரும் சந்தானம் மீண்டும் காமெடியனாக நடித்தால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்து வரும் சூழலில், சந்தானத்தின் உடைய பழைய வீடியோ ஒன்று இரண்டாகி வருகிறது.
வீடியோவில் நடிகர் சந்தானம் பேசியிருப்பதாவது :-
இனி காமெடியனாக நடிக்க மாட்டேன் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என சென்று சந்தானம் அவர்களிடம் நடிகர் சிம்பு அவர்கள் ஏன் இந்த முடிவை எடுத்தாய் ? எங்களுடன் அப்பப்போ ஒரு படத்தில் காமெடியனாக நடிக்கலாம் அல்லவா என்று கேட்கவே, அதற்கு நடிகர் சந்தானம் அவர்கள் நான் காமெடியனாக நடிக்க தயாராகத்தான் உள்ளேன் என்று கூறியது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்வதோடு ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.
2013 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்யப்பட்ட சுந்தர் சி அவர்களின் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஆன மதகஜராஜா விஷாலினுடைய நடிப்பில் சந்தானத்தின் உடைய காமெடி இணைந்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து மீண்டும் சந்தானம் காமெடி பாதையில் நடிக்க மாட்டாரா என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.