Blood Sugar Level: இரத்த சர்க்கரை அளவை சித்த வைத்திய முறையில் குணப்படுத்துவது எப்படி?
வீட்டுக்கு ஒருத்தருக்கு இந்த காலகட்டத்தில் சர்க்கரை வியாதி உள்ளது. அதாவது இந்த சர்க்கரை வியாதி அளவு கணையத்தில் சுரக்கப்படும் இன்சுலின் அளவு குறையும் பொழுது கட்டாயம் ரத்தத்தின் குளுக்கோஸ் அளவு அதிகரித்து விடும். ஆரம்பகட்ட காலத்தில் சர்க்கரை வியாதி இருப்பது கண்டறியவது சற்று கடினம்.
தொடர்ந்து சிறுநீர் கழிப்பது உடல் சோர்வற்றை இருப்பது அதிக அளவு எடை அல்லது எடை குறைவது உள்ளிட்டவை வைத்து தெரிந்து கொள்ளலாம். ஆனால் முறையாக பரிசோதனை செய்தால் மட்டுமே கண்டறிய முடியும். அவ்வாறு இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்கள் சித்த வைத்திய முறையை பின்பற்றும் பொழுது விரைவில் பலனை காண முடியும்.
தேவையான பொருட்கள்:
மஞ்சள் கரிசாலை 100 கிராம்
கீழாநெல்லி இலை 100 கிராம்
ஜாதிக்காய் 50 கிராம்
ஜாதிபத்திரி 50 கிராம்
வால் மிளகு 50 கிராம்
ஏலக்காய் 50 கிராம்
கிராம்பு 50கிராம்
மாசிக்காய் 50 கிராம்
தாளிசபத்ரி 50 கிராம்
கசகசா 50 கிராம்
செய்முறை:
தேவையான பொருட்கள் அனைத்தையும் நாட்டு மருந்து கடையில் வாங்கி கொள்ள வேண்டும்.
பின்பு இதனை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்ததை சலித்து தனியாக வைக்க வேண்டும்.
பின்பு தினந்தோறும் காலை மாலை என்ற வீதம் உணவு சாப்பிட்ட பிறகு இரண்டு கிராம் அளவு வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
இவ்வாறு செய்து வர ரத்த சர்க்கரை அளவானது கட்டுப்படும்.