தமிழகத்தில் உள்ள அரசு பணிகளில் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்தால் அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என்று திமுக அரசு தேர்தல் வாக்குறுதி அளித்திருந்த நிலையில் இன்றுவரை அதற்கான செயல் திறன் நடைமுறைப்படுத்தப்படாததால் டாஸ்மார்க் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.
டாஸ்மார்க் ஊழியர்கள் 21 ஆண்டுகளாக அரசு பணிகளில் வேலை பார்த்தும் இன்று வரை அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருப்பது 10 ஆண்டுகள் மட்டுமே வேலை பார்த்தால் அவர்களுக்கு அரசு பணிகளில் பணி நிரந்தரம் செய்யப்படும் என்று திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
வருகிற ஜனவரி 20 ஆம் தேதி டாஸ்மார்க் ஊழியர்களை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதாகவும் அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் 26 ஆம் தேதி காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து 27 ஆம் தேதி முதல் டாஸ்மார்க் கடைகளை அடைத்து போராட்டம் நடத்த இருப்பதாகவும் டாஸ்மார்க் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதற்கு எந்தவித பதிலும் இல்லாத காரணத்தால் இப்பொழுது கோரிக்கையுடன் சேர்த்து காத்திருப்பு போராட்டமும் அதனைத் தொடர்ந்து கடைகள் அடைப்பும் நடத்த இருப்பதாக டாஸ்மார்க் ஊழியர்களின் தலைவர் தெரிவித்திருக்கிறார்.