மீண்டும் சிறை.. செந்தில் பாலாஜி ஜாமீன் திரும்பபெறும் வழக்கு!! வெளியான புதிய தகவல்!!

Photo of author

By Rupa

DMK: அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக கட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தது குறித்து கடந்த வருடம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கிட்டத்தட்ட 300 நாட்களுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்ததோடு நிபந்தனைகள் கூடிய ஜாமினில் வெளியே வந்தார்.

வெளி வந்ததும் இவருக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டு, அடுத்தடுத்து வழக்கு ரீதியான நடவடிக்கைகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். இவ்வாறு இருக்கும் பொழுது இவருக்கு நிபதனை ஜாமினை வழங்க கூடாது ரத்து செய்யும்படி உச்சநீதிமன்றத்தில் வித்யா குமார் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.

மேற்கொண்டு இந்த வழக்கானது அபை எஸ் ஓ கா, ஏ ஜி மாசி உள்ளிட்ட நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில் நிபதனை ஜாமின் பெறக்கூடிய வழக்கு குறித்து பதில் மனு அளிக்க கோரி தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர். அதன்படி தமிழக அரசு அளித்த பதில் மனுவில், செந்தில் பாலாஜி வழக்கில் கிட்டத்தட்ட 517 சாட்சியங்களை விசாரிக்க வேண்டி வரும் என தெரிவித்துள்ளனர். இது வழக்கை இததடிப்பதற்கு நடத்தப்படும் நாடகம் என பலரும் கூறுகின்றனர்.

மீண்டும் செந்தில்பாலாஜி சிறைவாசம் அனுபவிக்க வாய்ப்பே இல்லை. அப்படி அனுபவிக்க நேர்ந்தால் அது திமுக-விற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என கூறுகின்றனர். குறிப்பாக கோபாலபுரம் வீட்டிற்கு முறையாக கணக்கு சொல்பவர் இவர் மட்டும் தான் என அரசியல் வட்டாரங்கள் கூறுவதுண்டு. அந்தவகையில் அவர் மிகவும் முக்கியமான நபர் என்பதால் மீண்டும் சிறைவாசம் செல்ல விடாமல் தடுக்கவே முயல்வர். அதற்கேற்றார் போல தான் வழக்கை இழுத்தடிக்க இவ்வாறான பதில் மனுக்கள் அளிக்கப்படும் எனக் கூறுகின்றனர்.