எம்.ஜி.ஆர் முடிசூடா மகுடனின் களம்!! அரசியல் மீது அவர் கொண்ட பற்று!!

0
129
The domain of MGR Matisuda Makudan!! His passion for politics!!
The domain of MGR Matisuda Makudan!! His passion for politics!!

ஜனவரி 17, 1917ஆம் நாள் அன்று பிறந்தவர் மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்). அண்ணாரது 108வது பிறந்தநாளான இன்று பல தலைவர்களும் சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழகம் முழுவதும் மூன்று தெருகளுக்கு ஒரு தெருவீதம் இவருடைய புகழ் பாடல்கள் ஒலித்துக் கொண்டே உள்ளன. இன்று இவருடைய சில முக்கிய தகவல்களை பகிர்வோம். இவருடைய ஆரம்ப காலத்தில் குடும்ப கஷ்டம் காரணமாக தெருக்கூத்துகளில் இவரும், இவருடைய அண்ணனும் இணைந்து நடித்து வந்துள்ளனர்.

முதன் முதலாக திரையுலகில் சதி லீலாவதி என்ற படத்தை 1936 ஆம் ஆண்டு நடித்துள்ளார். 1940 ஆம் ஆண்டு முதல் அவர் முண்ணனி நடிகரானர். ஆரம்ப காலங்களில் காங்கிரஸ் கொச்சின் மீது ஈடுபாடு கொண்ட அவர் பின்னர் சி. என்.அண்ணாதுரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராகி அவருடைய ஆர்வத்தினால் மிக முக்கிய தலைவர்களில் ஒருவர் ஆனார். அண்ணாதுரை இறந்த பிறகு கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு காரணமாக 1972 ஆம் ஆண்டு அதிமுக (அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்) என்ற கட்சியை துவக்கினார். இவர் கட்சிக்கு செய்யும் அதித தொண்டு காரணமாக 1977 ஆம் ஆண்டு முதலமைச்சராக தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார்.

இந்தியாவில் முதன் முதலாக முதலமைச்சராக வெற்றி பெற்ற நடிகர் இவரே. 1980 ஆம் ஆண்டு மத்திய அரசின் ஆதிக்கத்தால் நான்கு மாதங்கள் ஆட்சியிழந்தது அதிமுக. அதற்குப் பிறகு அவர் 1987 ஆம் ஆண்டு சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்தார். அவர் உயிரோடு இருக்கும் தருவாய் வரை அவர்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர். தமிழ்நாடு போற்றும் மிகச் சிறந்த தலைவரான அவர் டிசம்பர் 24, 1987 ஆம் ஆண்டு மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் புறப்பட்டுள்ளார். இன்றளவும் இவரது பெருமை பேசும் சாமானியர்களை நாம் கண்கூட பார்க்க இயலும். இன்று பிரதமர் மோடி இவரின் பெருமை குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவ்விணைப்பில் அரசியல் மீது தமக்கு ஆர்வம் வருவதற்கே எம்ஜிஆர் முக்கிய காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். எம்ஜிஆர் அவர்களின் சுயசரிதை கடந்த 2003 ஆம் ஆண்டு “நான் ஏன் பிறந்தேன்” என்ற புத்தகம் வாயிலாக வெளியாகியுள்ளது.

Previous articleத.வெ.க. 2026 தேர்தலுக்காக மட்டுமே போட்டியிடும்!!இடைத்தேர்தல்கள் புறக்கணிப்பு!!
Next articleKYC அப்டேட் செய்யாமல் இருந்தால் கணக்கு முடக்கப்படும்!! கடைசி தேதி ஜனவரி 23!!