அடிக்கடி கால் பாத வீக்கம் ஏற்படுகிறதா? சமையல் சோடாவை இப்படி பயன்படுத்துங்கள் போதும்!!

Photo of author

By Divya

இன்று பெரும்பாலானோர் கால் வீக்கத்தை அனுபவித்து வருகின்றனர்.கால் பாதங்கள் வீங்கி இருந்தால் நடப்பதில் அதிக சிரமத்தை சந்திக்க நேரிடும்.அடிக்கடி ஏற்படும் பாத வீக்கத்தை சரி செய்ய சமையல் சோடா மற்றும் அரிசி மாவை வைத்து பேஸ்ட் தயாரித்து பயன்படுத்தலாம்.இந்த முறையை தொடர்ந்து செய்து வந்தால் கால் பாத வீக்கம் நாளடைவில் குணமாகிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)சமையல் சோடா – ஒரு தேக்கரண்டி
2)அரிசி – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

1.கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி அரிசியை கொட்டி தண்ணீர் ஊற்றி இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

2.அடுத்து தண்ணீரை வடித்துவிட்டு ஊறவைத்த அரிசியை மிக்சர் ஜாரில் கொட்டி கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

3.பிறகு ஒரு தேக்கரண்டி சமையல் சோடாவை அதில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை கால்களில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.அரை மணி நேரம் வரை இந்த பேஸ்ட் கால்களில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

4.பிறகு வெது வெதுப்பான தண்ணீரில் கால் பாதங்களை வைத்து தேய்த்து கழுவ வேண்டும்.இந்த முறையை தொடர்ந்து செய்து வந்தால் கால் பாதங்கள் வீங்குவது கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
2)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

1.பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி லேசாக சூடுபடுத்த வேண்டும்.

2.பிறகு அதில் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் சூடாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

3.பின்னர் இந்த கலவையை ஆறவைத்து கால் பாதங்களில் அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து வெது வெதுப்பான நீர் கொண்டு கால் பாதங்களை ஊறவைக்க வேண்டும்.

3.பிறகு காட்டன் துணியில் கால்களை துடைத்துக் கொள்ளவும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் அடிக்கடி கால் வீங்கும் பிரச்சனை கட்டுப்படும்.அதேபோல் தினமும் தண்ணீரில் கல் உப்பு சேர்த்து சூடாக்கி கால் பாதங்கள் மீது ஊற்றி வந்தால் வீக்கம் குறைந்துவிடும்.இந்த செய்முறைகளில் ஒன்றை தொடர்ந்து செய்து வந்தால் கால் பாத வீக்கம் ஏற்படுவது முழுமையாக கட்டுப்படும்.