நீங்கள் உங்கள் தூக்கத்தை தொலைத்து வருகிறீர்கள் என்றால் நிச்சயம் கூடிய விரைவில் மாரடைப்பு,பக்கவாதம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க போகிறீர்கள் என்று அர்த்தம்.மன அழுத்தம்,மன உளைச்சல்,வேலைப்பளு போன்ற பல காரணங்களால் தூக்கமின்மை பிரச்சனையை சந்திக்க நேரிடுகிறது.
ஜாதிக்காய் பொடி தூக்கமின்மை பிரச்சனைக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த ஜாதிக்காய் பொடி அதிக வாசனை நிறைந்தவையாகும்.பிரியாணி,அசைவ உணவுகளில் இவை மசாலா பொருளாக சேர்க்கப்படுகிறது.
தூக்கமின்மை பிரச்சனையை போக்கும் ஜாதிக்காய் பொடியை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)ஜாதிக்காய் பொடி – 2 கிராம்
2)பால் அல்லது தண்ணீர் – 1 கிளாஸ்
3)பனங்கற்கண்டு – சிறிதளவு
செய்முறை விளக்கம்:-
நாட்டு மருந்து கடை,சூப்பர் மார்க்கெட்,சாதாரண மளிகை கடையில் ஜாதிக்காய் கிடைக்கும்.இதை வாங்கி வந்து வறுத்து பொடித்துக் கொள்ளலாம்.இல்லையென்றால் ஜாதிக்காய் பொடி ரெடிமேடாக கிடைக்கும்.அதையும் தங்களுக்கு தேவையான அளவு வாங்கிக் கொள்ளலாம்.
பிறகு பாத்திரத்தில் தண்ணீர் அல்லது பால் எது விருப்பமோ அதையே சேர்த்துக் கொள்ளலாம்.ஒரு கிளாஸ் அளவு சேர்த்துக் கொண்டால் போதுமானது.பால் சேர்த்திருந்தால் ஒரு கொதி வரவும் வரை காத்திருக்க வேண்டும்.
பிறகு தயாராக வைத்துள்ள ஜாதிக்காய் பொடி 2 கிராம் அளவிற்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்.அதேபோல் தண்ணீர் சேர்த்திருந்தால் அவை சூடானதும் ஜாதிக்காய் பொடி சேர்த்துக் கொள்ளலாம்.
பாலில் ஜாதிக்காய் பொடி நன்றாக கொதித்து வர வேண்டும்.இதனால் அடுப்பு தீயை குறைவாக வைத்துக் கொள்ள வேண்டும்.ஜாதிக்காய் பால் கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
பிறகு இதை கிளாஸிற்கு வடிகட்டி சுவைக்காக தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம்.இந்த ஜாதிக்காய் பாலை தினமும் மாலை நேரத்தில் பருகி வந்தால் இரவில் நிம்மதியான தூக்கம் வரும்.