இன்றைய காலகட்டத்தில் வயது வித்தியாசமின்றி யாருக்கு வேண்டுமானலும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.மாறிவரும் வாழ்க்கை முறை புகைபிடித்தல் மற்றும் உணவுமுறை பழக்கமே புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றது.இந்த புற்றுநோய் செல்கள் நாளடைவில் வளர்ச்சி அடைந்து கட்டிகளாக உருவெடுக்கிறது.இதனால் உயிருக்கு ஆபத்தான சூழல் ஏற்படுகிறது.இந்த புற்றுநோய் பாதிப்பை ஆரம்ப நிலையில் குணப்படுத்திக் கொள்வது மிக முக்கியமான ஒரு விஷயமாகும்.
புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்க கருமிளகில் கசாயம் செய்து பருகலாம்.இந்த கருமிளகு கசாயம் செய்வது குறித்த செய்முறை விளக்கம் இதோ.
தேவையான பொருட்கள்:-
*கருப்பு மிளகு – ஒரு தேக்கரண்டி
*தேன் – ஒரு தேக்கரண்டி
*தண்ணீர் – ஒரு கப்
கசாயம் தயாரிக்கும் முறை:-
செய்முறை 01:
முதலில் வாணலியில் கருப்பு மிளகு சொல்லிய அளவுப்படி சேர்த்து மிதமான தீயில் வறுக்க வேண்டும்.
பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் சூடுபடுத்த வேண்டும்.
பிறகு அரைத்த கருப்பு மிளகுப் பொடியை அதில் கொட்டி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
அரை கப் அளவிற்கு சுண்டி வரும் வரை மிளகு கசாயத்தை கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.
இந்த கசாயத்தை கிண்ணத்திற்கு ஊற்றி தேன் கலந்து பருகி வந்தால் உடலில் புற்றுநோய் வளரும் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும்.
கருமிளகில் கால்சியம்,சோடியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.அதேபோல் பைபரின் எனும் கூட்டுப்பொருள் கருமிளகில் நிறைந்து காணப்படுகிறது.இது உடலில் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட பெரிதும் உதவியாக இருக்கிறது. உணவில் அடிக்கடி மிளகு சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.தொண்டை கரகரப்பு,சளி,வறட்டு இருமல் போன்ற பாதிப்புகளால் அவதியடைந்து வருபவர்கள் கரு மிளகில் கசாயம் அல்லது கருமிளகு டீ செய்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க கருமிளகை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.