TVK: பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடும் மக்களை நாளை மறுநாள் விஜய் சந்திக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது பெரிய விமான நிலையத்தை 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்க உள்ளனர் இந்த விமான நிலையம் அமைப்பது குறித்து பரந்தூரை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பலரும் தொடர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விமான நிலையம் அமைப்பதற்காக மதிப்பீட்டுள்ள இடத்தில் 317 ஏக்கர் மட்டுமே அரசுடையது என்றும் மீதமுள்ள 2 666 ஏக்கர் நிலமானது அங்கு பல ஆண்டுகாலமாக விவசாயம் செய்து வரும் மக்களுடையது.
தற்பொழுது விமான நிலையம் அமைத்து விட்டால் இதன் இழப்பீடானது பெருமளவு சந்திக்க வேண்டியிருக்கும். இதனால் விமான நிலையம் நிறுவக்கூடாது என தொடர்ந்து போராடி வருகின்றனர். இது குறித்து அமைச்சர் தென்னரசு கூட 100 ரூபாய் முதலீடு செய்தால் கூட பல மடங்கு லாபம் கிடைக்கும் இதனை தடுக்காதீர்கள் என்று தெரிவித்தார். ஆனால் சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர் வேல்முருகன் இது குறித்து தீர்மானம் கொண்டு வந்தார்.
இத்திட்டம் செயல்படுத்தக் கூடாது என்று மாற்று கட்சி சேர்ந்தவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் விஜய் அவர்கள் இது குறித்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ் பி அலுவலகத்தில் அனுமதி கேட்டிருந்தார். ஆனால் இவர் அளித்த மனுவிற்கு உயர் அதிகாரிகள் சிறிதளவு கூட செவி சாய்க்கவில்லை. பொங்கல் பண்டிகை உள்ளிட்ட காரணங்களை மட்டுமே தெரிவித்து வந்துள்ளனர்.
இதனை பொறுக்க முடியாமல் விஜய் அவர்கள் பரந்தூர் கிராம மக்களை நேரடியாக சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள அம்பேத்கர் திடலில் தற்பொழுது மணல் சமன்படுத்துதல் எனத் தொடங்கி விஜய் மக்களிடம் கலந்தோசிக்கும் வகையில் மேடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்கையில் தற்பொழுது தான் அனுமதி அளித்துள்ளனர்.
இவ்வளவு நாட்கள் அனுமதி அளிக்காமளிருந்ததற்கு காரணம் விக்கிரவாண்டி மாநாட்டிலேயே நான் யார் என்பதையும் தனது கூட்டம் என்ன என்பதையும் அனைவருக்கும் விஜய் காட்டிவிட்டார். இதற்கு மேல் இதனை வளர விடக்கூடாது என்பதில் திமுக ஆணித்தரமாக உள்ளது. அந்த வகையில் தற்பொழுது இதற்கு அனுமதி அளித்து விட்டால் விஜய்யின் அரசியல் நகர்வு ஒரு படி மேலே சென்றுவிடும் என எண்ணியுள்ளனர்.
அதனாலயே அனுமதி வழங்காமல் தொடர்ந்த்து அலைக்கழித்து வந்துள்ளனர். ஆனால் அனுமதி அளிப்பதற்கு முன்னதாகவே மக்களை சந்திப்பதற்கான வேலை தொடங்கி விட்டதால் நாளை மறுநாள் மக்களை சந்திக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது.