நாம் அனைவரும் பற்களை முறையாக பராமரித்து வந்தால் மட்டுமே பல் சம்மந்தபட்ட பாதிப்புகளில் இருந்து தப்ப முடியும்.பற்களை சரியான முறையில் துலக்காதிருத்தல்,உணவு உட்கொண்ட பிறகு வாய் கொப்பளிக்க தவறுதல்,பல் துலக்கிய பிறகு நாக்கை சுத்தம் செய்யாதிருத்தல் போன்ற காரணங்களால் பற்களின் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கிறது.
இதன் விளைவாக பல் சொத்தை,மஞ்சள் கறை,வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.இந்த பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க பற்களை தினமும் சுத்தம் செய்ய வேண்டும்.பற்களில் அதிகப்படியான உணவுத் துகள்கள் படியும் பொழுது கறைகள் உருவாகிறது.இந்த மஞ்சள் கறைகளை கவனிக்க தவறினால் நாளடைவில் அவை செதில் போன்று பற்களில் ஒட்டிக் கொண்டு பல் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்துவிடும்.
எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள வாழைபழத் தோல் பற்பொடி செய்முறையை பின்பற்றி பல் மஞ்சள் கறைகளை அகற்றுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)வாழைபழத் தோல் – ஒன்று
2)இந்துப்பு – சிறிதளவு
3)பேக்கிங் சோடா – ஒரு தேக்கரண்டி
4)தேங்காய் எண்ணெய் – அரை தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
படி 01:
முதலில் வாழைப்பழத் தோல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு அதன் காம்பை நீக்கிவிட்டு வெயிலில் போட்டு நன்றாக உலர்த்தி எடுத்துக் கொள்ளுங்கள்.
படி 02:
அடுத்து இந்த வாழைப்பழத் தோலை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
படி 03:
பிறகு இதை ஒரு டப்பாவில் கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இந்துப்பை வாணலியில் போட்டு சிறிது வறுத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு பொடித்து வைத்துக் கொள்ளுங்கள்.
படி 04:
இந்த இந்துப்பு பொடியை வாழைப்பழ பவுடரில் கொட்டி கலந்து விடுங்கள்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்துவிடுங்கள்.
படி 05:
இந்த வாழைப்பழ பொடியில் கால் தேக்கரண்டி அளவு எடுத்து கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.பிறகு அதில் அரை தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.
படி 06:
இந்த கலவையை பிரஸ்ஸில் வைத்து பற்களை துலக்கி வந்தால் மஞ்சள் கறை,அழுக்குகள் அனைத்தும் நீங்கி பற்கள் வெண்மையாகிவிடும்.இந்த கலவையை காலை மற்றும் இரவு உணவிற்கு பிறகு பற்களுக்கு பயன்படுத்த வேண்டும்.தொடர்ந்து ஒரு வாரம் பயன்படுத்தினாலே நல்ல பலன் கிடைக்கும்.