வேகமாக உடல் எடையை குறைக்க.. இந்த அரிசியில் கஞ்சி செய்து.. தினம் ஒரு கப் குடிங்க போதும்!!

Photo of author

By Divya

அதிகப்படியான கொழுப்பு உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது.உடலில் படியும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள குதிரைவாலி அரிசி மற்றும் பச்சை பயறு கொண்டு கஞ்சி செய்து பருகி வரலாம்.

குதிரைவாலி அரிசி உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.வெள்ளை அரிசிக்கு பதில் இந்த அரிசியை உணவாக எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.உடற்பயிற்சியுடன் இந்த கஞ்சியை எடுத்துக் கொண்டால் விரைவில் உடல் எடை குறைந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)குதிரைவாலி அரிசி – 50 கிராம்
2)வெள்ளைப்பூண்டு பல் – பத்து
3)வெந்தயம் – கால் தேக்கரண்டி
4)பச்சை பயறு – 50 கிராம்
5)உப்பு – தேவையான அளவு
6)சீரகம் – கால் தேக்கரண்டி
7)தேங்காய் துருவல் – கால் கப்
8)தண்ணீர் – ஒன்றரை கப்

செய்முறை விளக்கம்:-

*முதலில் குதிரைவாலி அரிசி மற்றும் பச்சை பயறை தனி தனி கிண்ணத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.இதில் பச்சை பயறை மட்டும் லேசாக வறுத்து உடைத்து ஊறவைக்க வேண்டும்.

*இவை இரண்டும் நன்கு ஊறி வந்த பிறகு மிக்சர் ஜாரில் கொட்டி கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

*அடுத்து வெள்ளைப்பூண்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து வெந்தயம்,சீரகம் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

*அடுத்து அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு நறுக்கி வைத்துள்ள பூண்டு,அரைத்த சீரக வெந்தயப் பொடி சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.

*அதன் பிறகு அரைத்து வைத்துள்ள குதிரைவாலி அரிசி மற்றும் பச்சை பயறு கலவையை அதில் கொட்டி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

*பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து கஞ்சி கொதித்து வரும் வரை காத்திருக்க வேண்டும்.அதன் பின்னர் கால் கப் அளவிற்கு துருவிய தேங்காய் கொட்டி கலந்து அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த குதிரைவாலி கஞ்சியை பருகி வந்தால் உடல் எடை குறைந்துவிடும்.