கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே மூடப்பட்டது.இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்வி நிறுவனங்களில் எப்போது வகுப்புகளை தொடங்கலாம் என்பது குறித்த அட்டவணையை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ)வெளியிட்டுள்ளது.
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்(ஏஐசிடிஇ)நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் வகுப்புகளை எப்போது தொடங்கலாம் என்ற அட்டவணையை வெளியிட்டது.ஆனால் தற்பொழுது அந்த அட்டவணைக்கு மாறாக புதிய அட்டவணையை அந்த கவுன்சில் வெளியிட்டுள்ளது.
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ள அட்டவணையில், நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் புதிய கல்வியாண்டு ஆகஸ்ட் 1 முதல் 2021 ஆம் ஆண்டு ஜூலை 31 வரை கடைப்பிடிக்கப்படும்.மேலும் பொறியியல் படிப்பிற்கான முதல் சுற்று கலந்தாய்வுகளை ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்குள் முடித்திருக்க வேண்டும்.இதன் பிறகு 2 மற்றும் 3 ஆம் சுற்று கலந்தாய்வுகளை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் முடித்திருக்க வேண்டும்.
இதனை அடுத்து முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகளை செப்டம்பர் 15 ஆம் தேதியில் தொடங்க வேண்டும்.மேலும் 2,3 மற்றும் 4 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 16 தேதி முதல் வகுப்புகளை தொடங்க வேண்டும் என்றும் முதுநிலை படிப்புகளுக்கான வகுப்புகளை செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்க வேண்டும்.இதற்கான மாணவர் சேர்க்கையை ஆகஸ்ட் 10 ஆம் தேதி முடித்திருக்க வேண்டும் என்று அந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.