இந்த ஒரு இலையின் மகிமை தெரிந்தால்.. மூக்கு மேல் விரல் வைப்பீங்க!! மஞ்சள் காமாலை நோய்க்கு பெஸ்ட் மருந்து இது மட்டுமே!!

Photo of author

By Divya

நம் முன்னோர் காலத்தில் அதிகளவு பயன்படுத்தப்பட்ட மூக்கிரட்டை கீரையை தற்பொழுது யாரும் உணவில் பயன்படுத்துவதில்லை.இந்த கீரை பல்வேறு நோய்களுக்கு மருந்தாகிறது.சிறுநீரக கல்,சிறுநீர் தொற்றுப்பாதை,மஞ்சள் காமாலை,பைல்ஸ் உள்ளிட்ட பல நோய்களை இந்த கீரை கொண்டு குணப்படுத்திக் கொள்ள முடியும்.

தற்பொழுது மஞ்சள் காமாலை,மூலம் மற்றும் கிட்னி ஸ்டோன் பாதிப்பை மூக்கிரட்டை கீரை கொண்டு குணப்படுத்துவது குறித்து சொல்லப்பட்டுள்ளது.

மஞ்சள் காமாலை

தேவையான பொருட்கள்:-

1)மூக்கிரட்டை கீரை – 20 கிராம்
2)கீழாநெல்லி இலை – 20 கிராம்
3)பசும்பால் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு உள்ளவர்கள் மூக்கிரட்டை கீரை மற்றும் கீழாநெல்லி இலையை சொல்லிய அளவுப்படி பறித்துக் கொள்ளுங்கள்.

பிறகு இதனை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யுங்கள்.அதன் பிறகு அம்மியில் இந்த இலைகளை வைத்து விழுது பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் இந்த விழுதை ஒரு கிளாஸில் போட்டு 100 மில்லி அளவு வெது வெதுப்பான பசும் பால் ஊற்றி கலந்து பருக வேண்டும்.காலை,மாலை என தொடர்ந்து மூன்று தினங்கள் பருகி வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

மூல நோய்

தேவையான பொருட்கள்:-

1)மூக்கிரட்டை கீரை – சிறிதளவு
2)மோர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் நீங்கள் மூக்கிரட்டை கீரையை பறித்து சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை விழுது பதத்திற்கு அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு ஒரு கிளாஸ் பசு மோர் ஊற்றி அரைத்த மூக்கிரட்டை கீரை விழுதை போட்டு கலந்து குடித்து வர மூலம் குணமாகும்.

கிட்னி ஸ்டோன்

தேவையான பொருட்கள்:-

1)மூக்கிரட்டை கீரை – தேவைக்கேற்ப
2)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.பிறகு தங்களுக்கு தேவையான அளவு மூக்கிரட்டை கீரை எடுத்து க்ளீன் செய்து சூடாகி கொண்டிருக்கும் தண்ணீரில் போட வேண்டும்.

இந்த நீரை பாதியாக சுண்டி வரும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.பிறகு இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி இளஞ்சூடாக இருக்கும் பொழுது பருக வேண்டும்.

தொடர்ந்து ஒருமாத காலம் இந்த மூக்கிரட்டை கீரை பானத்தை பருகி வந்தால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் முழுமையாக கரைந்து வெளியேறிவிடும்.