ஊட்டச்சத்து இல்லாத உணவுகள் மற்றும் மோசமான வாழ்க்கை முறையால் நரம்பு சம்மந்தபட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.குறிப்பாக நரம்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் மாரடைப்பிற்கு வழிவகுத்துவிடும்.
நமது உடலில் தமனிகளின் இரத்தம் தேங்குவதன் விளைவாக நரம்புகளின் அடைப்பு ஏற்படுகிறது.இந்த நரம்பு பாதிப்பு இரத்த ஓட்டத் தடையை ஏற்படுத்தும்.கால் நரம்பு அடைப்பு தொடர்ந்தால் இரத்தம் உறைதல் ஏற்படும்.இதனால் நுரையீரல்,இதயம் உள்ளிட்ட உறுப்புகள் கடுமையான பாதிப்பை சந்திக்கக் கூடும்.
எனவே நரம்பு அடைப்பு குணமாக இஞ்சி மற்றும் எலுமிச்சம் பழம் கொண்டு பானம் தயாரித்து பருகி வாருங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)ஒரு பீஸ் இஞ்சி
2)ஒரு எலுமிச்சம் பழம்
3)ஒரு கிளாஸ் தண்ணீர்
பயன்படுத்தும் முறை:-
**முதலில் ஒரு பீஸ் இஞ்சியை தோல் நீக்கிவிட்டு தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
**பிறகு இதை சிறு துண்டாக நறுக்கி மிக்சர் ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து ஒரு சிறிய எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் விதைகளை நீக்கிவிட்டு சாறை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள்.
**அதன் பின்னர் பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள்.பிறகு இஞ்சி சாறை அதில் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க வையுங்கள்.
**இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறை அதில் கலந்து பருகி வந்தால் நரம்பு அடைப்பு பிரச்சனை நீங்கும்.
**இந்த இஞ்சி எலுமிச்சை பானம் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக திகழ்கிறது.நீங்கள் தினமும் இந்த பானத்தை பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.இரத்த குழாயில் இருக்கின்ற கெட்ட கொழுப்புகள் கரைய இஞ்சி எலுமிச்சை பானம் பருகலாம்.
**செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இந்த பானத்தை பருவதன் மூலம் வாயுத் தொல்லை,நெஞ்செரிச்சல்,மலச்சிக்கல்,வயிறு வலி போன்ற பாதிப்புகள் நீங்கும்.
*உடலில் குவிந்து கிடக்கும் கெட்ட கொழுப்பு கரைய இஞ்சி எலுமிச்சை சேர்த்த பானம் பருகலாம்.