நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்த்தல்,கூன் விழுந்தபடி உட்காருதல்,முதுகு தண்டுவட பகுதியில் பிரச்சனை மற்றும் ஊட்டச்சத்து குறைபட்டால் முதுகு வலி ஏற்படுகிறது.ஆண்களைவிட பெண்களே கடுமையான முதுகு வலியை எதிர்கொள்கின்றனர்.முதுகு வலி வந்தால் நம் அன்றாட வேலைகளை செய்வதில் கடும் சிரமம் ஏற்பட்டுவிடும்.
முதுகு வலிக்கான அறிகுறிகள் இதோ:
*குனிந்து நிமிர்தலின் போது முதுகு பகுதியில் வலி உணர்தல்
*முதுகு தண்டுவட பகுதியில் அடிக்கடி வலி ஏற்படுதல்
முதுகு வலியை குணப்படுத்தும் ஹோம் ரெமிடி:
தேவையான பொருட்கள்:-
1)தண்ணீர் – தேவையான அளவு
2)கல் உப்பு – இரண்டு தேக்கரண்டி
3)காட்டன் துணி – ஒன்று
செய்முறை விளக்கம்:-
ஸ்டெப் 01:
நீங்கள் முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள்.
ஸ்டெப் 02:
தண்ணீர் நன்கு சூடாகி ஆவி வரும் ஸ்டேஜில் இரண்டு தேக்கரண்டி கல் உப்பை அதில் கொட்டி கரையும் வரை சூடுபடுத்துங்கள்.
ஸ்டெப் 03:
பிறகு இந்த தண்ணீர் பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கிவைத்து விட்டு ஒரு சாயம் போகாத காட்டன் துணியை அந்த நீரில் போட்டு நினைத்து முதுகில் வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
இதுபோன்று செய்தால் முதுகு வலிக்கு முழு நிவாரணம் கிடைக்கும்.இந்த சுடுநீரை முதுகு பகுதியில் வைத்து அழுத்தம் கொடுப்பதால் வலி,வீக்கம் முழுமையாக குறைந்துவிடும்.
சுடுநீரில் ஒத்தடம் கொடுத்தால் முதுகு பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரித்து தசை இறுக்கம் தளரும்.
அடிக்கடி முதுகுவலி பிரச்சனையை சந்திப்பவர்கள் தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயை சம அளவு எடுத்து சூடாக்கி முதுகு பகுதியில் ஊற்றி மசாஜ் செய்யலாம்.யோகா,தியானம் போன்றவற்றை செய்து வந்தால் முதுகு வலி மெல்ல மெல்ல குறையும்.
மேலும் மஞ்சள் தூள் மற்றும் ஓமத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து முதுகு வலி பாதிப்பு குணமாகும்.அதேபோல் இஞ்சி தேநீர் செய்து பருகி வந்தாலும் முதுகு வலி பாதிப்பிற்கு தீர்வு கிடைக்கும்.