நமது உடலில் இரத்தத்தின் வழியாக ஆக்சிஜன் எடுத்து செல்லும் வேலையையே இரத்த சிவப்பணுக்கள் செய்கிறது.இந்த இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் மன அழுத்தம்,அனேமியா(இரத்த சோகை),கருத்தரித்தலில் சிரமம்,உடல் சோர்வு போன்றவை ஏற்படும்.
இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் திடீர் மயக்கத்தை அடிக்கடி சந்திக்க நேரிடும்.இந்தியாவில் ஆண்களை காட்டிலும் பெண்கள் தான் இரத்த சிவப்பணு குறைபாட்டிற்கு ஆளாகி வருகின்றனர்.உலகில் இரத்த சோகை அதிகம் பாதித்த நாடுகளில் இந்திய டாப் இடத்தில் இருக்கின்றது.
உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.அதேபோல் முந்திரி விதையை அரைத்து பாலில் கலந்து பருகி வந்தால் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
முந்திரியில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள்:
புரதம்
தாதுக்கள்
நார்ச்சத்து
வைட்டமின்கள்
நல்ல கொழுப்பு
தேவையான பொருட்கள்:-
1)முந்திரி விதை – 10
2)பசும் பால் – ஒரு கிளாஸ்
3)தேன் – ஒரு ஸ்பூன்
முந்திரி பால் தயாரிக்கும் முறை:-
*முதலில் சொத்தை இல்லாத தரமான பத்து முந்திரி விதைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
*இதை வாணலியில் போட்டு பொன்னிறமாக வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு இந்த முந்திரியை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
*அடுத்து அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பால் கொதி வரும் சமயத்தில் அரைத்து வைத்திருக்கும் முந்திரி பருப்பு பொடியை அதில் கொட்டி கொதிக்க வைக்க வேண்டும்.
*பாலில் முந்திரி வாசனை வரும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த பாலை ஒரு கிளாஸிற்கு ஊற்றி இனிப்பு சுவைக்காக ஒரு ஸ்பூன் தூயத் தேன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.
*தேனில் இல்லாவிடில் பனங்கற்கண்டு சேர்த்துக் பருகலாம்.இந்த முந்திரி பருப்பு பாலை தொடர்ந்து பருகி வந்தால் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
*அதேபோல் இரும்புச்சத்து நிறைந்த பேரிச்சம் பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தாலும் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.