குடலில் தங்கிய நச்சுக் கழிவு மற்றும் கெட்ட வாயுக்களை சுத்தம் செய்ய.. இந்த பானம் குடிங்க!!

Photo of author

By Divya

இன்றைய வாழ்க்கை முறையில் பலரும் உணவுப் பழக்க வழக்கங்களால் குடல் சார்ந்த பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை மலச்சிக்கல்,வாயுத் தொல்லை,வயிறு உப்பசம்,வயிறு வலி போன்ற பாதிப்புகளை சந்திக்கின்றனர்.

இந்த பாதிப்புகளில் இருந்து மீள கறிவேப்பிலை,மலை நெல்லிக்காயை அரைத்து பானமாக பருகி வரலாம்.இதன் செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)கறிவேப்பிலை – ஒரு கப்
2)மலை நெல்லிக்காய் – நான்கு
3)தேன் – ஒரு தேக்கரண்டி
4)விளக்கெண்ணெய் – மூன்று துளிகள்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கப் கறிவேப்பிலையை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து நான்கு பெரிய நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு மிக்சர் ஜாரை எடுத்து கறிவேப்பிலை மற்றும் நறுக்கி வைத்துள்ள நெல்லிக்காய் துண்டுகளை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் கறிவேப்பிலை பேஸ்ட்டில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்துவிட வேண்டும்.பிறகு இந்த பானத்தை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தூயத் தேன் சேர்த்து கலந்துவிட வேண்டும்.இறுதியாக சில துளிகள் விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து பருக வேண்டும்.

இந்த நெல்லிக்காய் பானம் குடலில் உள்ள கழிவுகள் மற்றும் கெட்ட வாயுக்களை ஒரே நாளில் வெளியேற்றிவிடும்.

இந்த ஒரு பானத்தை இயற்கை பேதி பானமாக பருகி வந்தால் குடலில் நச்சுக் கழிவுகள் தேங்குவது முழுமையாக கட்டுப்படும்.குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த பானத்தை தொடர்ந்து பருகி வரலாம்.

ஆனால் குறை சர்க்கரை,சிறுநீரக கல்,மாதவிடாய் கோளாறு இருப்பவர்கள் இந்த நெல்லிக்காய் பானத்தை தவிர்த்துவிட வேண்டும்.