விந்து நீர்த்து போகும் பிரச்சனையால் அவதியுறும் ஆண்கள்.. இந்த ஒரு இலையில் கஷாயம் செய்து பருகுங்கள்!!

Photo of author

By Divya

நவீன காலகட்டத்தில் ஆண்,பெண் இருவரும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.உணவுமுறை மாற்றம்,மோசமான வாழ்க்கை முறையால் பலரும் பாலியல் சார்ந்த பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.குறைவான விந்து வெளியேறுதல்,நீர்த்த விந்து வெளியேறுதல்,கருப்பை தொடர்பான பிரச்சனை போன்ற பாதிப்புகளில் இருந்து மீண்டு குழந்தை வரத்தை பெற நெருஞ்சில் தண்டு மற்றும் நெருஞ்சில் இலையை மருந்தாக பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:

*நெருஞ்சில் தண்டு – சிறிதளவு
*பசும் பால் – ஒரு கிளாஸ்

தயாரிக்கும் முறை:

1)சிறிதளவு நெருஞ்சில் தண்டை சேகரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

2)பிறகு கல்வம் அல்லது மிக்சர் ஜாரில் இந்த நெருஞ்சில் தண்டை போட்டு அரைத்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

3)பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பால் பச்சை வாடை நீங்கும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.

4)பிறகு இந்த பாலை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி அரைத்து வைத்துள்ள நெருஞ்சில் சாறை அதில் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து பருகி வந்தால் ஆண்களுக்கு விந்து நீர்த்து போதல் பிரச்சனை சரியாகும்.கருப்பை தொடர்பான பிரச்சனையை சந்தித்து வரும் பெண்கள் இந்த நெருஞ்சில் தண்டு சாறை பருகி வந்தால் உரிய பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:

*நெருஞ்சில் இலை – ஒரு கப்
*தண்ணீர் – ஒரு கிளாஸ்

தயாரிக்கும் முறை:

1)முதலில் ஒரு கைப்பிடி நெருஞ்சில் இலையை தண்ணீரில் அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

2)பிறகு இதை வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.அடுத்து மிக்சர் ஜாரில் இந்த நெருஞ்சில் இலையை போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

3)பிறகு இந்த நெருஞ்சில் பொடியை ஒரு டப்பாவில் கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

4)அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.அதன் பிறகு அரைத்த நெருஞ்சில் பொடி ஒரு தேக்கரண்டி அளவு அதில் போட்டு கொதிக்க வையுங்கள்.

5)நெருஞ்சில் பானம் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகினால் ஆண் மற்றும் பெண்ணின் பாலியல் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும்.